இந்தியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 50 ஓவரில் 311 ரன்களை குவித்து, 312 ரன்கள் என்ற இலக்கை இந்தியாவிற்கு நிர்ணயித்துள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்கின.
டிரினிடாட்டில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிகோலஸ் பூரன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணி:
ஷிகர் தவான் (கேப்டன்), ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், ஆவேஷ் கான்.
வெஸ்ட் இண்டீஸ் அணி:
ஷேய் ஹோப் (விக்கெட் கீப்பர்), பிரண்டன் கிங், ஷமர் ப்ரூக்ஸ், கைல் மேயர்ஸ், நிகோலஸ் பூரன் (கேப்டன்), ரோவ்மன் பவல், அகீல் ஹுசைன், ரொமாரியோ ஷெஃபெர்டு, அல்ஸாரி ஜோசஃப், ஜெய்டன் சீல்ஸ், ஹைடன் வால்ஷ்.
இதையும் படிங்க - இதுதான் என்னோட லட்சியம்.. இந்திய அணிக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய ரெடியா இருக்கேன் - விராட் கோலி
முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஷேய் ஹோப் மற்றும் கைல் மேயர்ஸ் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 9 ஓவரில் 65 ரன்களை சேர்த்தனர். அதிரடியாக ஆடிய கைல் மேயர்ஸ் 23 பந்தில் 39 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
3ம் வரிசையில் இறங்கிய ஷமர் ப்ரூக்ஸ் 35 ரன்கள் அடித்தார். பிரண்டன் கிங் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய தொடக்க வீரர் ஷேய் ஹோப்புடன் 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் பூரன் சிறப்பாக பேட்டிங் ஆடினார்.
இதையும் படிங்க - என்னை பொறுத்தமட்டில் அவன் ஆல்ரவுண்டரே கிடையாது..! இந்திய வீரரை துச்சமாக மதிப்பிட்ட ஸ்காட் ஸ்டைரிஸ்
அரைசதம் அடித்த பூரன் 77 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களுடன் 74 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடிய ஷேய் ஹோப் சதமடித்தார். ஹோப்பும் பூரனும் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 117 ரன்களை குவித்தனர். சதமடித்த ஹோப் 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஹோப்பின் சதம், பூரனின் அரைசதம் மற்றும் மற்ற வீரர்களின் சிறு சிறு பங்களிப்பால் 50 ஓவரில் 311 ரன்களை குவித்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 312 ரன்கள் என்ற சற்றே கடினமான இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது.
