என்னை பொறுத்தமட்டில் அவன் ஆல்ரவுண்டரே கிடையாது..! இந்திய வீரரை துச்சமாக மதிப்பிட்ட ஸ்காட் ஸ்டைரிஸ்
தன்னை பொறுத்தமட்டில் ஷர்துல் தாகூர் ஒரு ஆல்ரவுண்டரே கிடையாது என்று நியூசிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ் கருத்து கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் பேட்ஸ்மேன் இடத்திற்கும் பவுலிங் இடத்திற்கும் வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆனால் ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் இடத்திற்கு ஹர்திக் பாண்டியாவிற்கு போட்டியே இல்லை. ஹர்திக் பாண்டியாவிற்கு நிகர் அவர்தான் எனுமளவிற்கு அவரைத்தவிர தரமான ஆல்ரவுண்டர் இல்லை.
ஷர்துல் தாகூர் ஆஸ்திரேலிய மண்ணில் அபாரமாக பேட்டிங் ஆடி டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். ஷர்துல் தாகூர் முக்கியமான போட்டிகளில், குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவிற்காக அபாரமாக பேட்டிங் ஆடி வெற்றிகளை பெற்றுக்கொடுத்திருக்கிறார். அவருக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க - இந்திய அணி செய்திருக்கும் இந்த சாதனைக்கு பெருமைப்படுறதா? இல்ல அசிங்கப்படுறதா?
மிதவேகப்பந்துவீச்சாளரான ஷர்துல் தாகூர், தனது பேட்டிங் திறமையையும் நிரூபித்ததன் விளைவாக, ஹர்திக் பாண்டியாவிற்கு நிகராக இல்லாவிட்டாலும், அவரும் ஒரு ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டராக பார்க்கப்படுகிறார். அதனால் தான், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வளிக்கப்பட்டதால் ஷர்துல் தாகூர் தான் ஆல்ரவுண்டராக எடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஷர்துல் தாகூர் குறித்து பேசியுள்ள நியூசிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ், ஷர்துல் தாகூர் பேட்டிங் ஆடுவார் என்பது அவருக்கு கூடுதல் பலம். டெஸ்ட் போட்டிகளில் சில மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்கள் ஆடியிருக்கிறார். ஆனால் ஹர்திக் பாண்டியா மாதிரி ஷர்துல் தாகூர் ஒரு முழுமையான ஆல்ரவுண்டர் இல்லை.
இதையும் படிங்க - இந்தியாவிற்கு மேட்ச்சை ஜெயித்து கொடுத்த சஞ்சு சாம்சனின் விக்கெட் கீப்பிங்! ஒரே டைவில் ஹீரோவான சாம்சன்.. வீடியோ
ஒரேமாதிரியான 2 வீரர்கள் அணியில் தேவையா? ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியா இருக்கும்போது, அவருக்கு நிகரில்லாத ஷர்துல் தாகூர் தேவையில்லை. ஹர்திக் பாண்டியாவுடன் ஷர்துல் தாகூருக்கு போட்டியில்லை. ஹர்திக் பாண்டியா ஆடாத போட்டிகளில் மாற்று ஆல்ரவுண்டருக்கான இடத்திற்குத்தான் தாகூர் போட்டி போடுகிறார் என்று ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்.