5 டன் மணல், 5000 ஹாக்கி பந்துகள் கொண்டு உருவாக்கப்பட்ட மிகப்பெரிய ஹாக்கி ஸ்டிக் புதிய உலக சாதனை!
சுதர்சன் பட்நாயக் 5000 ஹாக்கி பந்துகளை கொண்டு உருவாக்கிய மிகப்பெரிய ஹாக்கி ஸ்டிக் மணல் சிற்பம் புதிய உலக சாதனை படைத்துள்ளது.
ஒடிசா மாநிலத்தில் ஆண்களுக்கான ஹாக்கி உலகக் கோப்பை தொடர் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கான தொடக்க விழா கடந்த 9 ஆம் தேதி கட்டாக் நகரில் நடந்தது. தற்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை ஆண்களுக்கான ஹாக்கி தொடர் லீக் போட்டிகள் ஒடிசா மாநிலத்தின் புவனேஷ்வர் மற்றும் ரூர்கேலா ஆகிய பகுதிகளில் நடந்து வருகிறது.
டீம் மேட்டின் காதலியுடன் ஆபாசமாக பேசும் பாபர் அசாம்: சர்ச்சையான வீடியோ!
16 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இந்த தொடரில் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவில் உள்ள 4 அணிகளும், மற்ற 3 அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாடும். குரூப்பில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். ஹாக்கி உலகக் கோப்பை தொடரை முன்னிட்டு புகழ் பெற்ற மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக், 5000 ஹாக்கி பந்துகளைக் கொண்டு உருவாக்கிய மிகப்பெரிய ஹாக்கி ஸ்டிக் மணல் சிற்பம் புதிய உலக சாதனை படைத்துள்ளது.
Hockey World Cup 2023: டிராவில் முடிந்த அர்ஜெண்டினா - ஆஸ்திரேலியா போட்டி!
உலகக் கோப்பை ஹாக்கி தொடர் தொடங்குவதற்கு முன்னதாக கடந்த 10 ஆம் தேதி கிட்டத்தட்ட 15 மாணவர்களின் உதவியுடன் 2 நாட்கள் இரவு, பகலுமாக 5 டன் மணல் கொண்டு 105 அடி நீளம் கொண்ட 5000 ஹாக்கி பந்துகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட மிகப்பெரிய ஹாக்கி ஸ்டிக் உலக சாதனைகள் இந்திய அமைப்பால் புதிய உலக சாதனை படைத்துள்ளது.
இதயப்பூர்வமாக அனைவருக்கும் நன்றி: சவால்களுக்கு தயாராக இருக்கிறேன்: ரிஷப் பண்ட் டுவிட்டரில் பதிவு!
உலக சாதனைகள் இந்திய அமைப்பின் நிறுவனர் பாவன் சோலங்கி, துறை தலைவர் சுஷ்மா நர்வேகர் மற்றும் மூத்த நீதிபதி சஞ்சய் நர்வேகர் ஆகியோர் தலைமையிலான குழு சுதர்சன் பட்நாயக் உருவாக்கிய மிகப்பெரிய ஹாக்கி ஸ்டிக் மணல் சிற்பம் புதிய உலக சாதனைகள் படைத்ததற்கான சான்றிதழை வழங்கியுள்ளது. 16 அணிகளை குறிக்கும் வகையில் 16 வகையான வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ரூர்கேலாவில் உள்ள பிர்சா முண்டா ஹாக்கி மைதானத்தில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
WIPL: மகளிர் ஐபிஎல் கிரிக்கெட்: ரூ.951 கோடிக்கு ஒளிபரப்பும் உரிமையை கைப்பற்றிய வையாகாம்-18 நிறுவனம்!