இதயப்பூர்வமாக அனைவருக்கும் நன்றி: சவால்களுக்கு தயாராக இருக்கிறேன்: ரிஷப் பண்ட் டுவிட்டரில் பதிவு!
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் முதல் முறையாக டுவிட்டரில் பிசிசிஐ, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் இதர அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
டெல்லி - டேராடூன் சாலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் காரை அதிவேகமாக ஓட்டிச் சென்ற போது சாலை தடுப்பில் கார் மோதி விபத்துக்குள்ளானது. கடந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் நடந்த இந்த விபத்தில் கார் முற்றிலும் தீப்பிடித்து எரிந்தது. ஆனால் தீப்பிடிப்பதற்கு முன்பாக ரிஷப் பண்ட் கார் ஜன்னலை உடைத்து சுற்றியிருந்தவர்களின் உதவியுடன் காப்பாற்றப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி செய்யப்பட்டு, பின்னர் டேராடூனில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
WIPL: மகளிர் ஐபிஎல் கிரிக்கெட்: ரூ.951 கோடிக்கு ஒளிபரப்பும் உரிமையை கைப்பற்றிய வையாகாம்-18 நிறுவனம்!
அங்கு அவருக்கு அடிப்படையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, மூளை மற்றும் முதுகுத்தண்டில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக டேராடூனில் இருந்து மும்பைக்கு அழைத்து செல்லப்பட்டு, மும்பையில் உள்ள கோகிலாபெண் தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவரும் நிலையில், முழங்காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
SA20: அதிரடி காட்டிய கிளாசன்:எளிதில் வெற்றி பெற்ற டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ்!
மும்பை தனியார் மருத்துவமனையில் புகழ்பெற்றவர் எலும்பியல் மருத்துவரான டின்ஷாவின் மேற்பார்வையின் கீழ் ரிஷப் பண்ட்டுக்கு முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. பிசிசிஐயும், மருத்துவக் குழுவும் ரிஷப் பண்ட்டின் அறுவை சிகிச்சையை கண்காணித்தது. ரிஷப் பண்ட் முழுவதுமாக குணமடைய சில மாதங்கள் ஆகும்.
புத்தாண்டை புதுவிதமாக வரவேற்ற கிங்: எண்ணற்ற சாதனைகளுக்கு சொந்தக்காரரான விராட் கோலி!
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பண்ட் முதல் முறையாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அனைத்து ஆதரவுக்கும், நல்வாழ்த்துக்களுக்கும் நான் பணிவாகவும் நன்றியுடனும் இருக்கிறேன். எனது அறுவை சிகிச்சை வெற்றியடைந்ததை உங்களுக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மீட்பதற்கான பாதை தொடங்கிவிட்டது. வரவிருக்கும் சவால்களுக்கும் நான் தயாராக இருக்கிறேன். பிசிசிஐ, ஜெய் ஷா மற்றும் இதர அரசு அதிகாரிகளுக்கும், அவர்களது நம்ப முடியாத ஆதரவிற்கும் நன்றி.
ஒரு நாள் போட்டியில் சாதித்து காட்டிய இந்தியா! 317 ரன்கள் வித்தியாசம் - இதுவே முதல் முறை!
உங்களது அன்பான வார்த்தைகள், ஊக்குவித்தலுக்காகவும் ரசிகர்கள், சக அணியினர், மருத்துவர்கள் என்று அனைவருக்கும் நான் இதயப்பூர்வமாக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். உங்கள் அனைவரையும் களத்தில் காண்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு பதிவில், ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என்னால் நன்றி சொல்ல முடியாமல் போயிருக்கலாம். ஆனால், எனது விபத்தின் போது எனக்கு உதவிய இந்த 2 ஹீரோக்களையும் நான் பாராட்டியாக வேண்டும். அவர்கள் மூலமாக நான் பாதுகாப்பாக மருத்துவமனைக்கு சென்றேன். ரஜத் குமார் மற்றும் நிஷு குமார் ஆகியோருக்கு நன்றி. நான் என்றென்றும் நன்றியுடையவனாகவும், கடமைப்பட்டவனாகவும் இருப்பேன் என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 15 என்றாலே வெறியாட்டம் ஆடும் கோலி..! பிரமிக்க வைக்கும் கோலியின் ஜனவரி 15 வரலாறு