டீம் மேட்டின் காதலியுடன் ஆபாசமாக பேசும் பாபர் அசாம்: சர்ச்சையான வீடியோ!
சக அணி வீரரின் காதலியுடன் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் ஆபசமாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சைக்கு பெயர் போன பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் மற்றொரு சர்ச்சையான நிகழ்வு நடந்துள்ளது. பாகிஸ்தான் அணியின் கேப்டன் தனது சக அணி வீரரின் காதலியுடன் ஆபாசமாக பேசுவதும், மெசேஜ் செய்வதுமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில், நீ என்னுடன் தொடர்ந்து ஆபாசமாக பேசிக் கொண்டு இருந்தால் உனது காதலனை நான் அணியில் இருந்து நீக்க மாட்டேன் என்று கூறுவது போன்று காட்சி அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
Hockey World Cup 2023: டிராவில் முடிந்த அர்ஜெண்டினா - ஆஸ்திரேலியா போட்டி!
ஆனால், உண்மையில், அவர் யாருடைய காதலி என்பது குறித்த் தெரியவில்லை. அந்த வீரரது பெயர் குறித்தும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், அது பாபர் அசாம் கிடையாது. அவரைப்போன்று இருக்கும் வேறொருவரு என்று பாபர் அசாமிற்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர். இதற்கு முன்னதாக பாபர் அசாம் மீது மற்றொரு குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது, ஹமீசா முக்தர் என்ற பெண், பாபர் அசாம் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட போது, அவர் பொய்யான குற்றச்சாட்டு என்று எழுந்தது. இதையடுத்து, ஹமீசா முக்தர் என்ற பெண்ணே தனது புகாரை திரும்ப பெற்றுள்ளார்.
இதயப்பூர்வமாக அனைவருக்கும் நன்றி: சவால்களுக்கு தயாராக இருக்கிறேன்: ரிஷப் பண்ட் டுவிட்டரில் பதிவு!
இந்த நிலையில், பாபர் அசாம் மீது மற்றொரு சர்ச்சையான விமர்சனம் எழுந்துள்ளது. இது குறித்து விசாரணை மேற்கொண்டால் மட்டுமே இது உண்மையா? அல்லது பொய்யா? என்பது குறித்து தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது. பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஏற்கனவே சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரையும், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரையும் இழந்தது. இதன் காரணமாக கேப்டன் பொறுப்பிலிருந்து பாபர் அசாமை நீக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால், இதுவரை அவர் நீக்கப்படாததால், அவர் மீது இப்படியொரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
WIPL: மகளிர் ஐபிஎல் கிரிக்கெட்: ரூ.951 கோடிக்கு ஒளிபரப்பும் உரிமையை கைப்பற்றிய வையாகாம்-18 நிறுவனம்!
ஆனால், உண்மையில் இது பொய்யான தகவல். சமூக ஊடகங்களில் தவறாக பகிரப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அதுமட்டுமின்றி பாபர் அசாமிற்கு ஆதரவாக பலரும் குரல் எழுப்ப தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 15 என்றாலே வெறியாட்டம் ஆடும் கோலி..! பிரமிக்க வைக்கும் கோலியின் ஜனவரி 15 வரலாறு