- Home
- Sports
- Sports Cricket
- இலங்கை தொடரில் இது நடக்கலைனா??? இந்திய வீரர்களுக்கு கம்பீர் வார்னிங்.. பரபரப்பு தகவல்!
இலங்கை தொடரில் இது நடக்கலைனா??? இந்திய வீரர்களுக்கு கம்பீர் வார்னிங்.. பரபரப்பு தகவல்!
Gautam Gambhir: இலங்கை டெஸ்ட் தொடருக்கு இந்திய அணி தயாராகி வருகிறது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வீரர்களுக்கு ஒரு வார்னிங் விடுத்துள்ளார். இது குறித்து விரிவாக பார்ப்போம்.

இந்திய அணிக்கு கெளதம் கம்பீர் வார்னிங்
இலங்கைக்கு எதிரான இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமானது. தொடருக்கு முன்னதாக, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், அணி வீரர்களுக்கு ஒரு வலுவான செய்தியை கொடுத்துள்ளார்.
இந்திய அணியிடமிருந்து அர்ப்பணிப்பையும், கடின உழைப்பையும் எதிர்பார்க்கிறேன் என்பதை கம்பீர் தெளிவாக விளக்கியுள்ளார். இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி, ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ள மனதளவிலும், உடலளவிலும் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
சவால் எதுவானாலும் தயாராக இருக்க வேண்டும்
இலங்கை தொடருக்கு முன் வீரர்களிடம் கம்பீர் பேசிய வீடியோவை பிசிசிஐ (BCCI) வெளியிட்டுள்ளது. அதில் கம்பீர், "நமக்கு முன்னாடி என்ன இருக்கு, நாம எதுக்காக விளையாடுறோம்னு நம்ம எல்லாருக்கும் நல்லாவே தெரியும். நம்ம உழைப்பை இன்னும் அதிகப்படுத்தலாம், நம்ம எல்லைகளைத் தாண்டி இன்னும் கடுமையா உழைக்கலாம்.
எல்லா வகையிலும் பக்காவா தயாராகலாம். ஆகஸ்ட் 15-ம் தேதி காலை போட்டி தொடங்கும் போது, நாம முதலில் பேட்டிங் செய்தாலும் சரி, பவுலிங் செய்தாலும் சரி... நம்ம மேல வீசப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் சரியான பதிலை கொடுக்க முழுசா தயாராக இருக்கணும்" என்று தெரிவித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு தேவையான தொடர்
கடந்த ஆண்டு இறுதியில் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா 0-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. அதன்பிறகு, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) சுழற்சியில் இந்திய அணிக்கு இது முதல் பெரிய தொடர். ஜூன் மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பெற்ற வெற்றியால் அணி புத்துணர்ச்சி பெற்றிருந்தாலும், 'தி ஓவல்' மைதானத்தில் நடக்கும் WTC இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை அதிகரிக்க, இலங்கைக்கு எதிரான தொடர் வெற்றி இந்தியாவிற்கு மிகவும் முக்கியம்.
தற்போது, WTC புள்ளிப் பட்டியலில் இந்தியா 48.15% உடன் 5வது இடத்திலும், இலங்கை 41.67% உடன் 6வது இடத்திலும் உள்ளன. கொழும்பில் உள்ள என்சிசி மைதானத்தில் பயிற்சியைத் தொடங்கியுள்ள இந்திய அணி, முதல் டெஸ்டுக்கு முன் இலங்கை லெவன் அணியுடன் மூன்று நாள் பயிற்சி ஆட்டத்திலும் விளையாட தொடங்கியுள்ளது.
புதிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு
காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா இந்த தொடரில் இருந்து விலகியதால், ரஞ்சி டிராபியில் ஜம்மு & காஷ்மீர் அணிக்காக 60 விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆக்கிப் நபிக்கு முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைத்துள்ளது.
அதேபோல, மத்திய பிரதேச அணிக்காக உள்ளூர் போட்டிகளில் ஆல்-ரவுண்டராக ஜொலித்த 33 வயதான சரான்ஷ் ஜெயினுக்கும் முதல் முறையாக தேசிய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அணிக்கு புதிதாக வந்துள்ள நபி மற்றும் ஜெயினுக்கு கம்பீர் பிரத்யேகமாக வாழ்த்து தெரிவித்தார். "நீங்க இங்க வர்றதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கீங்க. வாய்ப்பு கிடைக்கும்போது உங்க குடும்பமும், நாடும் பெருமைப்படும்படி விளையாடுங்க" என்று கம்பீர் கூறினார். புதிய ஃபீல்டிங் பயிற்சியாளர் சுபதீப் கோஷையும் கம்பீர் அணிக்கு வரவேற்றார்.
இந்திய அணியில் தொடர் காயங்கள்
தற்போதைய இந்திய அணியில் கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு மட்டுமே இலங்கையில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளது. இலங்கையின் ஸ்பின் பிட்ச்களை எதிர்கொள்ள கேப்டன் சுப்மன் கில், ராகுல், ஜெய்ஸ்வால் ஆகியோர் ஏற்கனவே சிறப்புப் பயிற்சியை தொடங்கிவிட்டனர்.
இந்திய அணியின் பயிற்சிக்காக ஹர்ஷ் துபே, ஷிவாங் குமார், தனுஷ் கோடியன், விப்ராஜ் நிகம் ஆகியோர் நெட் பவுலர்களாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பும்ராவுடன், தொடை தசைப்பிடிப்பு காயத்தால் வாஷிங்டன் சுந்தர் முதல் டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, ஆகாஷ் தீப் ஆகியோரும் இந்த தொடரில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

