MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IND vs SL Test: சிங்கம் ரீ-என்ட்ரி! உடற்தகுதி தேர்வில் பும்ரா கெத்து! இந்திய ரசிகர்களுக்கு ஸ்வீட் நியூஸ்!

IND vs SL Test: சிங்கம் ரீ-என்ட்ரி! உடற்தகுதி தேர்வில் பும்ரா கெத்து! இந்திய ரசிகர்களுக்கு ஸ்வீட் நியூஸ்!

IND vs SL Test: இங்கிலாந்து தொடரில் காயம் அடைந்த ஜஸ்பிரித் பும்ரா காயத்தில் இருந்து குணமடைந்து விட்டதாகவும், உடற்தகுதி தேர்வில் அவர் வெற்றி பெற்று விட்டதாகவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2 Min read
Author : Rayar A
Published : Aug 01 2026, 12:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இலங்கை டெஸ்ட் தொடருக்கு பும்ரா ரெடி
Image Credit : Getty

இலங்கை டெஸ்ட் தொடருக்கு பும்ரா ரெடி

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடக்கவிருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட முக்கியமான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, இந்திய அணிக்கு ஒரு ஆறுதலான செய்தி கிடைத்துள்ளது. காயத்தால் அவதிப்பட்டு வந்த இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, தற்போது முழுமையாக குணமடைந்து, இந்தத் தொடரில் விளையாடத் தயாராகிவிட்டார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஃபிட்னஸ் தேர்வில் பும்ரா வெற்றி
Image Credit : Getty

ஃபிட்னஸ் தேர்வில் பும்ரா வெற்றி

இலங்கை சுற்றுப்பயணத்திற்காக பிசிசிஐ சமீபத்தில் அறிவித்த 15 பேர் கொண்ட அணியில், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்ஷன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால், அவர்கள் இருவரும் ஃபிட்னஸை நிரூபித்தால் மட்டுமே அணியில் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

 இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்தின்படி, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (Centre of Excellence) நடந்த அனைத்து கடினமான ஃபிட்னஸ் சோதனைகளிலும் பும்ரா வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற்றுள்ளார். இதனால், வரவிருக்கும் தொடரில் ஆடும் லெவனில் தேர்வு செய்யப்படுவதற்கு அவர் தயாராக இருக்கிறார்.

34
பிசிசிஐ வட்டாரங்கள் சொல்வது என்ன?
Image Credit : Getty

பிசிசிஐ வட்டாரங்கள் சொல்வது என்ன?

பும்ராவின் உடல்நிலை குறித்துப் பேசிய பிசிசிஐயின் மூத்த அதிகாரி ஒருவர், "ஜஸ்பிரித் பும்ரா காயத்திலிருந்து முழுமையாக மீண்டுவிட்டார். அனைத்து ஃபிட்னஸ் சோதனைகளிலும் அவர் பாஸ் செய்துவிட்டார். அவர் அணியின் மிக முக்கிய பந்துவீச்சு அஸ்திரம் என்பதால், இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் அவர் விளையாடுவார்" என்று தெரிவித்துள்ளார்.

44
இந்தியாவுக்கு முக்கியமான இலங்கை தொடர்
Image Credit : Getty

இந்தியாவுக்கு முக்கியமான இலங்கை தொடர்

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15 அன்று காலே மைதானத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 23 அன்று கொழும்புவிலும் தொடங்கவுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும் நோக்கில், இந்தத் தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. 

தற்போதைய சூழலில், இறுதிப் போட்டிக்கு முன்னேற இந்தியா மீதமுள்ள 9 டெஸ்ட் போட்டிகளில் குறைந்தது 7-ல் வெற்றி பெற வேண்டும். எனவே, நியூசிலாந்துக்கு எதிரான உள்நாட்டுத் தொடருக்கு முன்பாக, இலங்கையை 2-0 என்ற கணக்கில் வீழ்த்துவது இந்திய அணியின் முக்கிய இலக்காக உள்ளது.

இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி

சுப்மன் கில் (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்ஷன் (ஃபிட்னஸைப் பொறுத்து), துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மனவ் சுதர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் ப்ரார், சரன்ஷ் ஜெயின்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய கிரிக்கெட் அணி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs NZ T20: புயல் வேகத்தில் அர்ஷ்தீப் சிங்.. புவனேஷ்வர் குமாரின் சாதனையை தகர்த்து வரலாற்று சாதனை!
Recommended image2
Kieron Pollard: MI அணியின் புதிய ‘கிங்’ பொல்லார்ட்..! தலைமைப் பயிற்சியாளராக அதிரடி புரமோஷன்..
Recommended image3
IND vs NZ 2nd T20: இளம் தோனி வந்தாச்சு.. ருத்ரதாண்டவமாடிய திலக் வர்மா.. இந்திய அணி த்ரில் வெற்றி!
Related Stories
Recommended image1
IND vs SL Test: 33 வயதில் இந்திய அணியில் அறிமுகமாகும் வீரர்! யார் இந்த சரன்ஷ் ஜெயின்? பிசிசிஐ தேர்வு செய்தது ஏன்?
Recommended image2
டி20 ரேங்கில் அபிஷேக் சர்மா ராஜ்ஜியம்.. முதலிடத்தை இழந்த 'மிஸ்டரி' ஸ்பின்னர்.. பும்ரா ரேங்க் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved