- Home
- Sports
- Sports Cricket
- IND vs SL Test: 33 வயதில் இந்திய அணியில் அறிமுகமாகும் வீரர்! யார் இந்த சரன்ஷ் ஜெயின்? பிசிசிஐ தேர்வு செய்தது ஏன்?
IND vs SL Test: 33 வயதில் இந்திய அணியில் அறிமுகமாகும் வீரர்! யார் இந்த சரன்ஷ் ஜெயின்? பிசிசிஐ தேர்வு செய்தது ஏன்?
IND vs SL Test: Saransh Jain: இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் 33 வயதான சரன்ஷ் ஜெயின் இடம்பிடித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். யார் இவர்? இவரை பிசிசிஐ தேர்வு செய்தது ஏன்? என்பது குறித்து பார்ப்போம்.

இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை BCCI-யின் தேர்வுக் குழு அறிவித்துள்ளது. இந்த அணிக்கு சுப்மன் கில் கேப்டனாகவும், கே.எல். ராகுல் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15 முதல் 19 வரை காலே சர்வதேச மைதானத்திலும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 23 முதல் 27 வரை கொழும்புவிலும் நடைபெற உள்ளது.
இந்திய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணியில் சேர்க்கப்பட்டிருந்தாலும், BCCI-யின் Centre of Excellence (COE) வழங்கும் உடற்தகுதி சான்றிதழைப் பொறுத்தே அவர் விளையாடுவது உறுதி செய்யப்படும். இதேபோல், தமிழக வீரர் பி. சாய் சுதர்சனின் உடற்தகுதியும் COE-யின் ஒப்புதலைப் பொறுத்தே அமையும்.
33 வயதில் இந்திய அணியில் அறிமுகமான சரன்ஷ் ஜெயின்
சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், தொடை தசைப்பிடிப்பு காயம் காரணமாக முதல் டெஸ்டில் விளையாடமாட்டார். அவருக்குப் பதிலாக, 33 வதான ஸ்பின்னர் சரன்ஷ் ஜெயின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவருக்கு இதுவே முதல் டெஸ்ட் அழைப்பாகும். மூத்த ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, 2026 ஐபிஎல் போட்டியின்போது ஏற்பட்ட முழங்கை காயத்தில் இருந்து மீண்டு அணிக்குத் திரும்பியுள்ளார். துணைக்கண்ட ஆடுகளங்களில் அவரது வருகை, இந்தியாவின் சுழற்பந்து வீச்சுக்கு பெரும் பலம் சேர்க்கும்.
யார் இந்த சரன்ஷ் ஜெயின்?
இந்த அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், துருவ் ஜுரல், குல்தீப் யாதவ், மனவ் சுதர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் ப்ரார், மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இந்திய அணியில் இடம்பிடிக்க ஏராளமான இளைஞர்கள் தவம் கிடக்கும் நிலையில், 33 வயதில் சரன்ஷ் ஜெயின் இந்திய அணியில் அறிமுகமானது பல்வேறு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
யார் இவர்? என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த 33 வயதான சரன்ஷ் ஜெயின் இடதுகை பேட்ஸ்மேன் மற்றும் வலதுகை ஆஃப்-பிரேக் சுழற்பந்து வீச்சாளர் ஆவார். 2014-15 சீசனில் மத்தியப் பிரதேச அணிக்காக முதல்தர போட்டிகளில் அறிமுகமான இவர், தனது சுழற்பந்து வீச்சினாலும், தேவைப்படும் நேரங்களில் கீழ்வரிசையில் இறங்கி ரன்கள் சேர்க்கும் திறனாலும் அணியின் முக்கியத் தூணாக மாறினார்.
முதல் தர போட்டிகளில் ஆல்ரவுண்டராக அசத்தல்
மத்தியப் பிரதேச அணி ரஞ்சி கோப்பையை வெல்வதற்கும் மற்றும் தொடர்ச்சியான நாக் அவுட் சுற்றுகளுக்கு முன்னேறுவதற்கும் முக்கியக் காரணமாக இருந்தார். இதன் காரணமாக India A, Central Zone மற்றும் Rest of India அணிகளில் தேர்வாகி துலீப் டிராபி மற்றும் இரானி கோப்பைகளில் சிறப்பாகச் செயல்பட்டார். முதல்தர போட்டிகளில் இவர் பேட்டிங்கில் 2223 ரன்களும், பவுலிங்கில் 188 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
33 வயதில் இந்திய டெஸ்ட் அணிக்கு முதன்முறையாக அழைப்பு பெற்றுள்ள சரன்ஷ் ஜெயின், துணைக் கண்ட ஆடுகளங்களில் (Spin-friendly conditions) ஆஃப்-ஸ்பின்னராகச் சிறப்பாகச் செயல்படக்கூடியவர். வாஷிங்டன் சுந்தரைப் போல பந்துவீச்சுடன் பேட்டிங்கிலும் பங்களிக்கக்கூடிய திறமை கொண்டவர் என்பதால் இலங்கை தொடருக்கு இவரை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி:
சுப்மன் கில் [கேப்டன்], கே.எல். ராகுல் [துணை கேப்டன்], யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் [விக்கெட் கீப்பர்], சாய் சுதர்சன் (உடல் தகுதியை நிரூபித்தால் விளையாடுவார்), துருவ் ஜுரல் [விக்கெட் கீப்பர்], ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மனவ் சுதர், ஜஸ்பிரித் பும்ரா (உடல்தகுதியை நிரூபிடித்தால் விளையாடுவார்) முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் ப்ரார், தேவ்தத் படிக்கல் மற்றும் சரன்ஷ் ஜெயின்

