ஐபிஎல் 16வது சீசனில் சாய் சுதர்சனின் பொறுப்பான அரைசதத்தால் டெல்லி கேபிடள்ஸை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 

ஐபிஎல் 16வது சீசனின் ஏப்ரல் 4 நடந்த போட்டியில் டெல்லி கேபிடள்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டெல்லி அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

குஜராத் டைட்டன்ஸ் அணி:

ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், முகமது ஷமி, ஜோஷுவா லிட்டில், யஷ் தயால், அல்ஸாரி ஜோசஃப். 

டெல்லி கேபிடள்ஸ் அணி:

பிரித்வி ஷா, டேவிட் வார்னர் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், ரைலீ ரூசோ, சர்ஃபராஸ் கான் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், அபிஷேக் போரெல் (விக்கெட் கீப்பர்), குல்தீப் யாதவ், சேத்தன் சக்காரியா, கலீல் அகமது, அன்ரிக் நோர்க்யா.

IPL 2023: சிஎஸ்கே பவுலர்கள் நோ பால், வைடு வீசுவதை தடுப்பது எப்படி..? கேப்டன் தோனிக்கு கவாஸ்கர் அட்வைஸ்

முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா 7 ரன்களுக்கும், மிட்செல் மார்ஷ் 4 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். நிதானமாக நின்று ஆடிய டேவிட் வார்னரும் 37 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ரைலீ ரூசோ ரன்னே அடிக்காமல் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டானார். 

களத்தில் பொறுப்புடன் நின்று ஆடிய சர்ஃபராஸ் கான் பொறுப்பை தனது தோள்களில் சுமந்ததால் நிதானமாக ஆடி 34 பந்தில் 30 ரன்கள் அடித்திருந்த நிலையில், ரஷீத் கான் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். அறிமுக வீரர் அபிஷேக் போரெல் 11 பந்தில் 20 ரன்கள் அடித்து அவரும் ரஷீத் கான் பவுலிங்கில் அவுட்டானார். அக்ஸர் படேல் நின்று ஆடி டெத் ஓவரில் அடித்து ஆடி 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 36 ரன்கள் அடித்து இன்னிங்ஸை முடித்து கொடுத்தார். இதையடுத்து 20 ஓவரில் 162 ரன்கள் அடித்தது டெல்லி கேபிடள்ஸ் அணி.

163 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஷுப்மன் கில் மற்றும் ரிதிமான் சஹா ஆகிய இருவருமே தலா 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பவர்ப்ளேயிலேயே 54 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது குஜராத் டைட்டன்ஸ் அணி. 

IPL 2023:பையன் செம டேலண்ட்; இந்த சீசனுக்கு பின் இந்திய அணியில் இடம் கிடைக்கும்! இளம் வீரருக்கு சேவாக் புகழாரம்

அதன்பின்னர் சாய் சுதர்சன் - விஜய் சங்கர் ஆகிய 2 தமிழகத்தை சேர்ந்த வீரர்களும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுப்புடன் பேட்டிங் ஆடி 4வது விக்கெட்டுக்கு 53 ரன்கள் சேர்த்தனர். விஜய் சங்கர் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய சாய் சுதர்சன் அரைசதம் அடிக்க, அவருடன் 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டேவிட் மில்லர் அதிரடியாக ஆடி 16 பந்தில் 31 ரன்களை அடிக்க, 19வது ஓவரில் இலக்கை அடித்தது. சாய் சுதர்சன் 62 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுக்க, 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.