- Home
- Sports
- Sports Cricket
- IPL 2023: சிஎஸ்கே பவுலர்கள் நோ பால், வைடு வீசுவதை தடுப்பது எப்படி..? கேப்டன் தோனிக்கு கவாஸ்கர் அட்வைஸ்
IPL 2023: சிஎஸ்கே பவுலர்கள் நோ பால், வைடு வீசுவதை தடுப்பது எப்படி..? கேப்டன் தோனிக்கு கவாஸ்கர் அட்வைஸ்
ஐபிஎல் 16வது சீசனில் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸிடம் தோற்ற சிஎஸ்கே அணி, 2வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆனாலும் சிஎஸ்கே பவுலர்கள் அதிகமான நோ பால் மற்றும் வைடுகளை வீசிய நிலையில், அதை தடுப்பதற்கு சுனில் கவாஸ்கர் ஆலோசனை கூறியுள்ளார்.

ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 4 முறை கோப்பையை வென்றுள்ள சிஎஸ்கே அணி, 5வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்த சீசனில் களமிறங்கியது. முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸிடம் தோற்ற சிஎஸ்கே அணி, 2வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸை எதிர்கொண்டது.
சென்னை சேப்பாக்கத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட்டும் டெவான் கான்வேவும் இணைந்து அதிரடியாக ஆடி அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ருதுராஜ் கெய்க்வாட் 31 பந்தில் 57 ரன்களும், கான்வே 29 பந்தில் 47 ரன்களும் அடித்தனர். ஷிவம் துபே 16 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடித்து மிடில் ஓவரில் கேமியோ ரோல் பிளே செய்தார். வெறும் 3 பந்துகளே எதிர்கொண்ட தோனி, 2 சிக்ஸர்களை விளாசி ஆட்டமிழந்தார். 20 ஓவரில் 217 ரன்களை குவித்த சிஎஸ்கே அணி, லக்னோவை 205 ரன்களுக்கு கட்டுப்படுத்தி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றிருந்தாலும், சிஎஸ்கே அணியின் பவுலிங் சிறப்பாக இல்லை. குறிப்பாக கேப்டன் தோனிக்கு திருப்தியளிக்கவில்லை. அதற்கு காரணம், சிஎஸ்கே பவுலர்கள் வழங்கிய எக்ஸ்ட்ராஸ். லக்னோவிற்கு எதிரான போட்டியில் மட்டும் 12 வைடுகள் மற்றும் 3 நோ பால்கள் வீசப்பட்டன. அதனால் தான் போட்டி மிகவும் நெருக்கமாக சென்று 12 ரன்கள் என்ற குறைவான வித்தியாசத்தில் வெற்றியை பெற நேர்ந்தது. வைடு, நோ பால்களை தவிர்த்திருந்தால் பெரிய வெற்றியை பெற்றிருக்கலாம்.
சிஎஸ்கே பவுலர்கள் மீதான அதிருப்தியை தோனியும் வெளிப்படுத்தினார். போட்டிக்கு பின் இதுகுறித்து பேசியபோது, நோ பால் வீசவே கூடாது; வைடுகள் குறைவாக வீசலாம். இந்த போட்டியில் நிறைய எக்ஸ்ட்ராஸ் கொடுத்துவிட்டார்கள். அவற்றை கண்டிப்பாக நிறுத்தியே ஆகவேண்டும். இல்லையெனில் அவர்கள் வேறு கேப்டனின் கீழ் ஆட நேரிடும் என எச்சரித்தார்.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர், சிஎஸ்கே அணிக்குள்ளாகவே பெனால்டி முறை செயல்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அபராதத்திற்கு பயந்தாவது பவுலர்கள் நோ பால், வைடு வீசமாட்டார்கள் எனும் தொனியில் தெரிவித்துள்ளார்.