Asianet News TamilAsianet News Tamil

குடும்பத்தோடு டின்னர் சென்ற சச்சின் டெண்டுல்கர்: வைரலாகும் பிக்ஸ்!

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தனது மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்து டின்னர் சாப்பிட சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Sachin Tendulkar Spotted with his wife and daughter sara at mumbai Restaurant
Author
First Published Dec 23, 2022, 10:44 AM IST

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். மாஸ்டர் பிளாஸ்டர், கிரிக்கெட் உலகில் கடவுள் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்று பல சாதனைகளை புரிந்துள்ளார். கடந்த 1989 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இதே போன்று அதே ஆண்டில் டிசம்பர் 18 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அறிமுகமானார். ஒரு நாள் போட்டிகளில் 18 ஆயிரம் ரன்களும், டெஸ்ட் போட்டிகளில் 15 ஆயிரம் ரன்களும் சேர்த்தார்.

IPL auction 2023: தோனி முதல் இஷான் கிஷான் வரை - அதிக எக்ஸ்பென்ஷிவ் வீரர்கள் யார் யார்?

முதல் முறையாக ஒரு நாள் தொடரில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை சச்சின் பெற்றார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 200 ரன்கள் சேர்த்தார். இவரைத் தொடர்ந்து சேவாக், ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் என்று இந்திய வீர்ர்கள் மட்டுமே இரட்டை சதங்கள் அடித்துள்ளானர். ரோகித் சர்மா அதிகபட்சமாக 264 ரன்கள் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

IPL Mini Auction 2023: எத்தனை மணிக்கு எந்த சேனலில் பார்க்கலாம்? வீரர்கள் பட்டியல்.. அணிகளின் கையிருப்பு தொகை

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர் சச்சினின் மகள் சாரா டெண்டுல்கர். லாஸ் ஏஞ்செல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மருத்துவத்திற்கான மாஸ்டர் படிப்பு படித்து வருகிறார். தற்போது கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால், மும்பை வந்துள்ளார். இதன் காரணமாக சச்சின் தனது மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்து நேற்றி இரவு உணவு அருந்து சென்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அர்ஜுன் டெண்டுல்கர் ரஞ்சி டிராபியில் கோவா அணிக்காக விளையாடி வருகிறது. தனது அறிமுக போட்டியிலேயே சதம் அடித்து அர்ஜூன் டெண்டுல்கர் சாதனை படைத்தார் எனப்து குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியிலிருந்து ரமீஸ் ராஜா அதிரடி நீக்கம்..! புதிய தலைவர் நியமனம்

Follow Us:
Download App:
  • android
  • ios