Asianet News TamilAsianet News Tamil

IPL auction 2023: தோனி முதல் இஷான் கிஷான் வரை - அதிக எக்ஸ்பென்ஷிவ் வீரர்கள் யார் யார்?

ஐபிஎல் போட்டிக்கு தோனி வரும் போது அவருடைய ஆரம்ப விலை ரூ.6 கோடி. அதன் பிறகு ஒவ்வொரு சீசனுக்கும் அவரது மதிப்பு கூடிக் கொண்டே சென்று தற்போது அதிக எக்ஸ்பென்ஷிவ் வீரராக திகழ்கிறார்.

MS Dhoni was the most expensive pick but when he entered into IPL First worth Rs 6 crore only
Author
First Published Dec 23, 2022, 10:04 AM IST

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான மினி ஏலம் இன்று பிற்பகல 2.30 மணிக்கு கொச்சியில் உள்ள கிராண்ட் ஹயட் ஹோட்டலில் நடக்கிறது. பத்து அணிகளில் காலியாக உள்ள 87 இடங்களை நிரப்புவதற்கு 405 வீரர்கள் ஏலம் விடப்படுகின்றனர். தோனி முதல் இஷான் கிஷான் வரையில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் ஏலத்தில் அதிக எக்ஸ்பென்ஷிவ் வீரர்களாக யாரெல்லாம் திகழ்கிறார்கள் என்று பார்க்கலாம்.

IPL Mini Auction 2023: ஏலத்திற்கு முன்பாக ஐபிஎல் அணிகளுக்கு செம குட் நியூஸ்

முதல் முறையாக தோனி ஐபிஎல் போட்டிக்கு வரும் போது அவரது மதிப்பு ரூ.6 கோடி, அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு கெவின் பீட்டர்சன் மற்றும் ஆண்ட்ரூ பிளிண்டாப் ஆகியோர் தலா ரூ.7.55 கோடி வரையில் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டைத் தொடர்ந்து நியூசிலாந்து கிரிக்கெட் பயிற்சியாளர் ஷேன் பாண்ட் மற்றும் மும்பை அணியின் வீரர் போலார்டு அதிகபட்சமாக ரூ.3.42 கோடி வரையில் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.

அந்த வீரரை எப்படி நீங்க நீக்கலாம்..? கேப்டன் ராகுல், பயிற்சியாளர் டிராவிட்டை கிழி கிழினு கிழித்த கவாஸ்கர்

கடந்த 2011 ஆம் ஆண்டு அதிக எக்ஸ்பென்ஷிவ் வீரராக கௌதம் காம்பிர் திகழ்ந்துள்ளார். அப்போது அவர் ரூ.11.4 கோடி வரையில் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு ரவீந்திர ஜடேஜா ரூ.9.72 கோடி வரையில் ஏலத்தில் எடுக்கப்பட்டிருக்கிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு கிளென் மேக்ஸ்வெல் ரூ.5.3 கோடி, 2014 ஆம் ஆண்டு யுவராஜ் சிங் ரூ.14 கோடி என்று ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். அடுத்த ஆண்டே யுவராஜ் சிங் டெல்லி அணிக்காக ரூ.16 கோடி வரையில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

IPL Mini Auction 2023: எத்தனை மணிக்கு எந்த சேனலில் பார்க்கலாம்? வீரர்கள் பட்டியல்.. அணிகளின் கையிருப்பு தொகை

2016 ஆம் ஆண்டு ஷேன் வாட்சன் ரூ.9.5 கோடி, 2017 ஆம் ஆண்டு பென் ஸ்டோக்ஸ் ரூ.14.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஜெய்தேவ் உனட்கட், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா ரூ.8.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணியின் பேட் கம்மின்ஸ் ரூ.15.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். கடந்த ஐபிஎல் சீசனில் கிறிஸ் மோரிஸ் அதிகபட்சமாக ரூ.16.25 கோடி வரையில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இளம் இந்திய வீரர் இஷான் கிஷான் ரூ.15.25 கோடி வரையில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios