Asianet News TamilAsianet News Tamil

Sachin Tendulkar Records: கோலி vs. சச்சின்: 35 வயதில் யார் சாதித்தது அதிகம்?

சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் இருவரும் 10,000 ரன்களுக்கு மேல் குவித்து சாதனை படைத்துள்ளனர். 35 வயதில் சச்சின் டெண்டுல்கர் 407 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 16,361 ரன்கள் எடுத்திருந்தார். கோலி 295 இன்னிங்ஸ் விளையாடி 13,906 ரன்களை குவித்துள்ளார்.

Sachin Tendulkar and Virat Kohli ODI, Century Records at The Age of 35 rsk
Author
First Published Aug 14, 2024, 9:10 AM IST | Last Updated Aug 14, 2024, 9:10 AM IST

சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டிங்கைப் பொறுத்த வரையில் விராட் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் இருவரும் மாஸான பேட்ஸ்மேன்கள். கிரிக்கெட் வாழ்க்கையில் 10,000 ரன்களுக்கு மேல் குவித்து சாதனை படைத்திருக்கின்றனர். இதில், சச்சின் 24 ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றவர். விராட் கோலி தனது வழிகாட்டியான டெண்டுல்கரின் மைல்கற்களை எட்ட முயற்சித்து வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி 100 சதங்கள் எட்டுவதற்கு இன்னும் 20 சதங்கள் அடிக்க வேண்டும்.

அர்ஷத் நதீமுக்குப் பரிசு மழை! - PUNJAB PAK 92.97 என்ற நம்பர் பிளேட்டில் ஹோண்டா சிவிக் கார் பரிசு!

தற்போது அவருக்கு 35 வயதாகும் நிலையில் ஏற்கனவே டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். எனினும், டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவில் அந்த 20 சதங்களை அடித்து புதிய சரித்திரம் படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே சச்சின் டெண்டுல்கர் 35 வயதாக இருந்த போது என்ன சாதனைகள் படைத்தார்? விராட் கோலியின் சாதனைகளுடன் அவை எப்படி ஒப்பிடப்படுகின்றன? என்று பார்க்கலாம் வாங்க…

வினேஷ் போகத் வழக்கில் தீர்ப்பு ஆக. 16 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: வினேஷ் போகத்திற்கு நியாயம் கிடைப்பதில் தாமதம்!

சச்சின் டெண்டுல்கர் 35 வயதாக இருந்த போது ஒருநாள் கிரிக்கெட்டில் 16,361 ரன்கள் எடுத்திருந்தார். இதுவே கோலி 35 வயதில் 13,525 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால், இதில் ஆச்சரியம் என்னவென்றால் சச்சின் 407 ஒருநாள் போட்டிகளில் விளையாடி அந்த இமாலய ரன்களை குவித்திருந்தார். ஆனால், கோலி 295 இன்னிங்ஸ் விளையாடி 13,906 ரன்களை குவித்துள்ளார். சச்சின் தனது 16ஆவது வயதில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலமாக அறிமுகமானார்.

பாரிஸ் ஒலிம்பிக் 2024: சாதனைகளும் சர்ச்சைகளும்; பாராலிம்பிக்ஸில் திருநங்கைகள் பங்கேற்பு?

அதே போன்று கோலி 2008 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். எதிரி நாடான பாகிஸ்தானுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் அறிமுகமானா என்பது சுவாரஸ்யமாக இருந்தாலும் பாகிஸ்தானுக்கு எதிராக 64 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2,381 ரன்கள் குவித்துள்ளார். இதில், 5 சதங்கள் அடங்கும். இதே போன்று பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி பன்னாட்டு போட்டிகளில் விளையாடியுள்ளார். 35 வயதாகு கோலி அவர்களுக்கு எதிராக 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 678 ரன்கள் எடுத்துள்ளார்.

ஓய்வுபெற்ற வீரர்களுக்கான லெஜண்ட்ஸ் பிரீமியர் லீக் - சச்சின், டிராவிட், சேவாக் பங்கேற்க வாய்ப்பு!

இதில் 3 சதங்கள் அடங்கும். அதுமட்டுமின்றி ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர் 183 ரன்கள் ஆகும். இது பாகிஸ்தானுக்கு எதிராக அடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கரின் எல்லா சாதனைகளையும் கோலியால் முறியடிக்க முடியுமா? ஏற்கனவே ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் (49) அடித்த சச்சினின் சாதனையை கோலி (50 சதங்கள்) முறியடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் 34,283 ரன்கள் குவித்துள்ளார்.

இதுவரையில் விராட் கோலி 26,942 ரன்கள் எடுத்துள்ளார். எனினும், விராட் கோலி ஓய்வு பெறுவதற்குள்ளாக 100 சதங்கள் மற்றும் சச்சின் டெண்டுல்கரின் 34,283 ரன்கள் சாதனையை முறியடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 100 சதங்கள் அடிக்க இன்னும் 20 சதங்கள் அடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios