IPL 2023: அதிரடியாக ஆடி சதத்தை தவறவிட்ட ருதுராஜ் கெய்க்வாட்..! மற்ற அனைவரும் சொதப்பல்.. GT-க்கு சவாலான இலக்கு
ஐபிஎல் 16வது சீசனின் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி ருதுராஜ் கெய்க்வாட்டின் அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவரில் 178 ரன்கள் அடித்து, 179 ரன்கள் என்ற சவாலான இலக்கை குஜராத் ஜெயிண்ட்ஸூக்கு நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல் 16வது சீசன் இன்று தொடங்கி நடந்துவருகிறது. இன்று அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்துவரும் முதல் போட்டியில் சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
குஜராத் டைட்டன்ஸ் அணி:
ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில்), கேன் வில்லியம்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், முகமது ஷமி, ஜோஷுவா லிட்டில், யஷ் தயால், அல்ஸாரி ஜோசஃப்.
சிஎஸ்கே அணி:
டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், பென் ஸ்டோக்ஸ், அம்பாதி ராயுடு, மொயின் அலி, ஷிவம் துபே, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சாண்ட்னெர், தீபக் சாஹர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்.
முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்கம் முதலே அடித்து ஆடி 23 பந்தில் அரைசதம் அடித்தார். ஒருமுனையில் ருதுராஜ் கெய்க்வாட் நிலைத்து நின்று அடித்து ஆட, மறுமுனையில் டெவான் கான்வே (1), மொயின் அலி(23), பென் ஸ்டோக்ஸ்(7), அம்பாதி ராயுடு(12) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். அதிரடியாக ஆடி சதத்தை நெருங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 50 பந்தில் 92 ரன்களை குவித்து 8 ரன்னில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார்.
IPL 2023: அவங்கதான் இருக்குறதுலயே செம டீம்.. பாண்டிங்கே பார்த்து பயப்படும் பயங்கரமான அணி
ஜடேஜா ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஷிவம் துபே 19 ரன்கள் அடித்தார். தோனி கடைசி ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி விளாச 14 ரன்கள் விளாசி இன்னிங்ஸை முடித்து கொடுத்தார். 20 ஓவரில் 178 ரன்களை குவித்த சிஎஸ்கே அணி, 179 ரன்கள் என்ற சவாலான இலக்கை குஜராத் டைட்டன்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.