Samaira Rohit: ரோஹித் ஹெல்த் அப்டேட் சொன்ன மகள் சமைரா..! மனதை கொள்ளை கொள்ளும் செம கியூட் வீடியோ
ரோஹித் சர்மா குறித்து அவரது மகள் சமைரா பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
இந்தியா - இங்கிலாந்து இடையே கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1ம் தேதி முதல் எட்ஜ்பாஸ்டனில் நடக்கிறது. இந்த போட்டிக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகிவரும் நிலையில், கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு கொரோனா பாசிட்டிவ் ஆனது.
லெய்செஸ்டெர்ஷைர் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் ஆடியபோது ரோஹித்துக்கு கொரோனா உறுதியானது. அதனால் தான் அந்த பயிற்சி போட்டியின் 2வது இன்னிங்ஸில் ரோஹித் பேட்டிங் ஆடவில்லை. கேஎல் ராகுலும் காயத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் மயன்க் அகர்வால் அணியில் எடுக்கப்பட்டார்.
இதையும் படிங்க - இப்ப மட்டுமில்ல; இனி எப்பவுமே அவன் கேப்டனாக முடியாது.. மோசமான கேப்டன்! ரோஹித் இல்லைனா அவருதான் கேப்டன்
ரோஹித் இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்பாக கொரோனாவிலிருந்து மீண்டு வந்துவிடுவார் என்று நம்பப்படுகிறது. ஒருவேளை அவர் ஆடமுடியாத பட்சத்தில் யார் கேப்டன்சி செய்வார் என்பதுதான் பெரும் கேள்வியாக இருக்கிறது.
இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள்! சேவாக்கின் தேர்வில் கோலிக்கு இடம் இல்ல
இந்நிலையில், ரோஹித்தின் மகள் சமைராவிடம், நிருபர்கள் ரோஹித் குறித்து கேட்டனர். அதற்கு நின்று பதிலளித்த சமைரா ரோஹித், அப்பா அறையில் தூங்கிக்கொண்டிருக்கிறார் என்று கூறினார். சமைராவின் அந்த கியூட்டான வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகிவருகிறது.