டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள்! சேவாக்கின் தேர்வில் கோலிக்கு இடம் இல்ல
வீரேந்திர சேவாக் தேர்வு செய்துள்ள டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்களில் விராட் கோலியை சேர்க்கவில்லை.
டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் - நவம்பரில் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. டி20 உலக கோப்பைக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது.
இந்த உலக கோப்பைக்கான இந்திய அணி தேர்வு மிக சுவாரஸ்யமாக இருக்கும். தேர்வாளர்களுக்கு மிகக்கடினமான காரியமாக இருக்கும். ரோஹித், கோலி ஆகிய சீனியர் வீரர்கள் ஃபார்மில் இல்லாமல் தவித்துவரும் அதேவேளையில், இளம் வீரர்கள் பலர் அபாரமாக விளையாடிவருகின்றனர்.
இதையும் படிங்க - IRE vs IND: விதியின் விளைவால் ஓபனிங்கில் வாய்ப்பு பெறும் திறமையான வீரர்..! இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்
இதற்கிடையே, முன்னாள் வீரர்கள் பலரும் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்துவருகின்றனர். அந்தவகையில், வீரேந்திர சேவாக் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்களை தேர்வு செய்துள்ளார். அதில் விராட் கோலியை சேர்க்கவில்லை.
இதையும் படிங்க - IRE vs IND டி20: இத்தனை வருஷமா தோனி, கோலி, ரோஹித் செய்யாத சாதனையை செய்த ஹர்திக் பாண்டியா
இதுகுறித்து கருத்து கூறியுள்ள சேவாக், இந்திய அணிக்கு டி20 கிரிக்கெட்டில் நிறைய ஆப்சன் இருக்கிறது. ஏகப்பட்ட பவர் ஹிட்டர்கள் இருக்கிறார்கள். ஆனால் என்னை பொறுத்தமட்டில் ரோஹித், இஷான் கிஷன், கேஎல் ராகுல் ஆகிய மூவரும் தான், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள்.
வலது - இடது காம்பினேஷனாக இருப்பது சிறந்தது. அந்தவகையில், ஓபனிங்கில் ரோஹித்தும் இஷான் கிஷனும் ஆடலாம். கேல் ராகுல் டி20 உலக கோப்பையில் ஆடுவதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும் என்று சேவாக் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க - உலக கோப்பை வின்னிங் கேப்டனுக்கு நேர்ந்த பரிதாபம்.. இயன் மோர்கன் ஓய்வு..! இங்கி.,அடுத்த கேப்டன் இவரா..?
டாப் 3 பேட்ஸ்மேன்களில் கோலியை சேவாக் தேர்வு செய்யவில்லை. கடந்த இரண்டரை ஆண்டுக்கும் மேலாக ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் திணறிவரும் விராட் கோலி, ஐபிஎல்லிலும் சோபிக்கவில்லை. அவர் மீது இங்கிலாந்து தொடரில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. கோலி இதே மாதிரி சொதப்பினால், அணியின் நலன் கருதி டி20 உலக கோப்பைக்கான அணியில் அவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்காமல் போகக்கூட வாய்ப்புள்ளது.