IRE vs IND டி20: இத்தனை வருஷமா தோனி, கோலி, ரோஹித் செய்யாத சாதனையை செய்த ஹர்திக் பாண்டியா
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா அபார சாதனை படைத்துள்ளார்.
அயர்லாந்துக்கு சென்று இந்திய அணி 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. ரோஹித், கோலி, பும்ரா, ரிஷப் பண்ட் ஆகிய முன்னணி வீரர்களை கொண்ட இந்திய அணி இங்கிலாந்தில் ஆடுவதால், ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி அயர்லாந்தில் ஆடுகிறது.
அயர்லாந்து - இந்தியா இடையேயான முதல் டி20 போட்டியில் உம்ரான் மாலிக் அறிமுகமானார். ருதுராஜ், தீபக் ஹூடா, ஆவேஷ் கான் ஆகியோரும் அணியில் இடம்பெற்றிருந்தனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, மழையால் ஆட்டம் தாமதமானது.
இதையும் படிங்க - உலக கோப்பை வின்னிங் கேப்டனுக்கு நேர்ந்த பரிதாபம்.. இயன் மோர்கன் ஓய்வு..! இங்கி.,அடுத்த கேப்டன் இவரா..?
அதனால் 12 ஓவர் போட்டியாக குறைத்து நடத்தப்பட்டது. முதலில் பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணி 12 ஓவரில் 108 ரன்கள் அடித்தது. 109 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பேட்டிங்கில் தீபக் ஹூடா அபாரமாக ஆடி 29 பந்தில் 47 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார். பவுலிங்கில் யுஸ்வேந்திர சாஹல் அபாரமாக பந்துவீசி 3 ஓவரில் வெறும் 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இதையும் படிங்க - IRE vs IND: ருதுராஜ் டீம்ல இருந்தும் ஓபனிங்கில் இறங்காதது ஏன்..? இதுதான் காரணம்
டி20 கேப்டனாக அறிமுக போட்டியிலேயே வெற்றி பெற்றதுடன் அபாரமான சாதனையையும் படைத்துள்ளார் ஹர்திக் பாண்டியா. இந்த போட்டியில் 12 பந்தில் 24 ரன்கள் அடித்து பேட்டிங்கில் அசத்திய பாண்டியா, பவுலிங்கிலும் சிறப்பாக செயல்பட்டார். புதிய பந்தில் பந்துவீசி அயர்லாந்து தொடக்க வீரர் பால் ஸ்டர்லிங்கின் விக்கெட்டை வீழ்த்தினார்.
இதையும் படிங்க - ENG vs IND: ரோஹித்துக்கு கொரோனா.. டெஸ்ட் அணியில் மயன்க் அகர்வால்..! கேப்டன் யார்..?
இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக அறிமுக போட்டியில் விக்கெட்டை வீழ்த்திய முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார் ஹர்திக் பாண்டியா. இதற்கு கேப்டனாக செயல்பட்ட தோனி, கோலி, ரோஹித் ஆகிய யாருமே பந்துவீசியதில்லை என்பதால் இந்த சாதனையை படைக்க முடியாமல் போயிற்று. ஹர்திக் பாண்டியா ஆல்ரவுண்டர் என்பதால் இந்த சாதனையை தன்வசப்படுத்தினார்.