IRE vs IND: ருதுராஜ் டீம்ல இருந்தும் ஓபனிங்கில் இறங்காதது ஏன்..? இதுதான் காரணம்
அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங் ஆடாதது ஏன் என்று கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்தார்.
அயர்லாந்துக்கு சென்று இந்திய அணி 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. ரோஹித், கோலி, பும்ரா, ரிஷப் பண்ட் ஆகிய முன்னணி வீரர்களை கொண்ட இந்திய அணி இங்கிலாந்தில் ஆடுவதால், ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி அயர்லாந்தில் ஆடுகிறது.
அயர்லாந்து - இந்தியா இடையேயான முதல் டி20 போட்டியில் உம்ரான் மாலிக் அறிமுகமானார். ருதுராஜ், தீபக் ஹூடா, ஆவேஷ் கான் ஆகியோரும் அணியில் இடம்பெற்றிருந்தனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, மழையால் ஆட்டம் தாமதமானது.
இதையும் படிங்க - ENG vs IND: ரோஹித்துக்கு கொரோனா.. டெஸ்ட் அணியில் மயன்க் அகர்வால்..! கேப்டன் யார்..?
அதனால் 12 ஓவர் போட்டியாக குறைத்து நடத்தப்பட்டது. முதலில் பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணி 12 ஓவரில் 108 ரன்கள் அடித்தது. 109 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் ஆகிய 2 தொடக்க வீரர்கள் இருந்தபோதிலும், இஷான் கிஷனுடன் தீபக் ஹூடா தொடக்க வீரராக இறங்கினார். ஹூடா அதிரடியாக பேட்டிங் ஆடி 29 பந்தில் 47 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார்.
இதையும் படிங்க - ஒரு காலத்தில் ஐசிசி எலைட் பேனல் அம்பயர்; இப்போ லாகூரில் துணிக்கடை ஓனர்! 9 வருஷமா கிரிக்கெட்டே பார்க்காத கொடுமை
தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் இருந்தபோதிலும், தீபக் ஹூடா தொடக்க வீரராக இறங்கியது அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது. ருதுராஜ் ஏன் ஓபனிங்கில் இறங்கவில்லை என்று போட்டிக்கு பின் ஹர்திக் பாண்டியா விளக்கமளித்தார்.
இதையும் படிங்க - TNPL 2022: ஹரி நிஷாந்த் அதிரடி அரைசதம்.. லைகா கோவை கிங்ஸை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அபார வெற்றி
இதுகுறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு காலில் காயம் என்பதால் தான் அவர் பேட்டிங் ஆடவில்லை. அவர் ஆடாததால் அனைத்து பேட்ஸ்மேன்களும் ஒரு பேட்டிங் ஆர்டர் மேலே இறங்க நேரிட்டது என்று பாண்டியா தெரிவித்தார்.