ஒரு காலத்தில் ஐசிசி எலைட் பேனல் அம்பயர்; இப்போ லாகூரில் துணிக்கடை ஓனர்! 9 வருஷமா கிரிக்கெட்டே பார்க்காத கொடுமை
ஒரு காலத்தில் ஐசிசி எலைட் பேனல் அம்பயராக இருந்த பாகிஸ்தானை சேர்ந்த ஆசாத் ரவுஃப் இப்போது லாகூர் லந்தா பஜாரில் துணிக்கடை நடத்திவருகிறார்.
பாகிஸ்தானை சேர்ந்த அம்பயர் ஆசாத் ரவுஃப். 2000ம் ஆண்டு 2013ம் ஆண்டு வரை சர்வதேச கிரிக்கெட்டில் அம்பயரிங் செய்தவர். 170 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அம்பயராக செயல்பட்டவர்.
ஐசிசி எலைட் பேனலில் இருந்தவர் ஆசாத் ரவுஃப். 2012ம் ஆண்டு பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகிய ஆசாத் ரவுஃப், 2013 ஐபிஎல்லில் சூதாட்ட, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினார். அந்த குற்றச்சாட்டு உறுதியானதால் 2016ம் ஆண்டு அவருக்கு பிசிசிஐ தடை விதித்தது. 2012-2013ம் ஆண்டுகளில் நடந்த சர்ச்சை சம்பவங்களுடன் அவரது அம்பயரிங் கெரியர் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், இப்போது அவர் பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் அமைந்துள்ள லந்தா பஜாரில் துணிக்கடை நடத்திவருவது தெரியவந்துள்ளது. துணிமணிகள், ஷூக்கள் ஆகியவற்றை விற்பனை செய்யும் கடையை நடத்திவருகிறார்.
இதையும் படிங்க - நீ பெரிய பிளேயரா இருக்கலாம்; அதுக்காக 14 மேட்ச்ல ஒரு அரைசதம் கூட அடிக்கலைனா எப்படி?ரோஹித்தை விளாசிய கபில் தேவ்
இதுதொடர்பாக பேசிய ஆசாத் ரவுஃப், இந்த கடை எனக்காக நடத்தவில்லை. என் கடையில் பணிபுரியும் ஊழியர்களின் நலனுக்காகவும், அவர்களது வருமானத்திற்காகவும் நடத்திவருகிறேன். 2013ம் ஆண்டுக்கு பிறகு நான் கிரிக்கெட் பார்ப்பதே இல்லை. ஒரு விஷயத்தை விட்டு ஒதுங்கிவிட்டால் மொத்தமாக ஒதுங்கிவிடவேண்டும் என்பது என் கொள்கை. அதனால் 2013ம் ஆண்டுக்கு பிறகு நான் கிரிக்கெட் பார்க்கவே இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.