நீ பெரிய பிளேயரா இருக்கலாம்; அதுக்காக 14 மேட்ச்ல ஒரு அரைசதம் கூட அடிக்கலைனா எப்படி?ரோஹித்தை விளாசிய கபில் தேவ்

எவ்வளவு பெரிய பிளேயராக இருந்தாலும், 14 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்றால் கேள்விகள் எழத்தான் செய்யும் என்று ரோஹித்தின் ஃபார்ம் பற்றி கபில் தேவ் கருத்து கூறியுள்ளார்.
 

kapil dev speaks about rohit sharmas poor form

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் - நவம்பரில் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி20 உலக கோப்பை நெருங்கிவரும் நிலையில், ஐபிஎல்லில் ரோஹித் மற்றும் கோலி ஆகிய 2 முக்கியமான பெரிய வீரர்களும் சரியாக ஆடாதது இந்திய அணிக்கு கவலையளிக்கும் விதமாக அமைந்தது.

விராட் கோலி இரண்டரை ஆண்டுகளாக ஃபார்மில் இல்லாமல் தவித்துவருகிறார். இந்த இரண்டரை ஆண்டுகளில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. ஆனால் ரோஹித் சர்மா ஓரளவிற்கு நன்றாகத்தான் ஆடிவந்தார். ஐபிஎல்லில் என்னவோ சோபிக்கவில்லை.

ஐபிஎல்லில் 14 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. ஐபிஎல்லில் 14 போட்டிகளில் 19.14 என்ற மோசமான சராசரியுடன் வெறும் 248 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார் ரோஹித். ரோஹித் சர்மாவின் மோசமான ஃபார்ம் கவலையளிக்கும் நிலையில், இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ரோஹித் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில், ரோஹித் சர்மா குறித்து பேசியுள்ள கபில் தேவ், ரோஹித் சர்மா மிகச்சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் 14 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை எனும்போது கேள்விகள் எழத்தான் செய்யும். கேரி சோபர்ஸ், டான் பிராட்மேன், சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், விவியன் ரிச்சர்ட்ஸ், விராட் கோலி என எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் 14 போட்டிகளில் அரைசதம் அடிக்கவில்லை என்றால் கேள்விகள் எழத்தான் செய்யும். 

இதையும் படிங்க - இப்படியொரு விக்கெட்டை இதற்கு முன் பார்த்துருக்க மாட்டீங்க.! வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்த ஹென்ரி நிகோல்ஸ்

ரோஹித் சர்மாவிற்குத்தான் அதற்கு பதில் தெரியும். அவர் ஆட்டத்தை என்ஜாய் செய்யவில்லையோ என நினைக்க தோன்றுகிறது. அதிகமான கிரிக்கெட் ஆடுவதாலா அல்லது ஆட்டத்தை என்ஜாய் செய்து ஆடுவதை நிறுத்திவிட்டாரா? இதில் என்ன காரணத்தால் அவர் சரியாக ஆடவில்லை என்று தெரியவேண்டும். 

ரோஹித் - கோலி மாதிரியான வீரர்கள் கண்டிப்பாக ஆட்டத்தை என்ஜாய் செய்து ஆடவேண்டும். அதுதான் முக்கியம். புகழை மட்டுமே வைத்து ஓட்டமுடியாது. ஃபார்மிற்கு வந்து ஸ்கோர் செய்ய வேண்டும் என்று கபில் தேவ் கருத்து கூறியுள்ளார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios