ENG vs IND: ரோஹித்துக்கு கொரோனா.. டெஸ்ட் அணியில் மயன்க் அகர்வால்..! கேப்டன் யார்..?
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் மயன்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா இடையேயான ஒரு டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1ம் தேதி தொடங்குகிறது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டி மட்டுமல்லாது, கடந்த ஆண்டு ஆடிய டெஸ்ட் தொடரின் தொடர்ச்சி என்பதால் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை வெல்லலாம் என்பதாலும், இந்திய அணி வெற்றி வேட்கையில் உள்ளது.
அந்த டெஸ்ட் போட்டிக்கு முன்பாக லெய்செஸ்டைர்ஷைர் கவுண்டி அணியுடன் ஆடிய பயிற்சி போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடினர்.
இதையும் படிங்க - IRE vs IND: ஹூடா அதிரடி பேட்டிங்; பாண்டியா கேப்டன்சியில் அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி! ஆட்டநாயகன் சாஹல்
அந்த பயிற்சி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோதே இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கொரோனா உறுதியானதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அதனால் தான் பயிற்சி போட்டியின் 2வது இன்னிங்ஸில் அவர் பேட்டிங் ஆடவில்லை.
இதையும் படிங்க - T20 WC இந்திய அணியிலிருந்து தூக்கி எறியப்படும் ரோஹித், கோலி, ராகுல்..? அணியின் நலன் கருதி அதிரடி முடிவு
ரோஹித் சர்மா இன்னும் தனிமையில் தான் உள்ளார். அவர் டெஸ்ட் போட்டியில் ஆடுவது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஏற்கனவே கேஎல் ராகுலும் காயம் காரணமாக ஆடமுடியாத சூழலில், ரோஹித்தும் கில்லும் தான் தொடக்க வீரர்களாக இறங்கவிருந்தனர். இந்நிலையில், ரோஹித்தும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் மயன்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க - என்னது ஜடேஜாவுக்கே டி20 உலக கோப்பை அணியில் இடம் இல்லையா..? ஜடேஜா இடத்தை தட்டித்தூக்கிய தரமான வீரர்
ரோஹித் ஆடுவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படாததால் கேப்டன்சி குறித்த அப்டேட் இல்லை. போட்டிக்கு முன்பாக ரோஹித் கொரோனாவிலிருந்து மீண்டு வந்துவிடுவார் என்று நம்பப்படுகிறது.