Asianet News TamilAsianet News Tamil

IRE vs IND: ஹூடா அதிரடி பேட்டிங்; பாண்டியா கேப்டன்சியில் அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி! ஆட்டநாயகன் சாஹல்

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
 

india beat ireland by 7 wickets in first t20 yuzvendra chahal wins man of the match award
Author
Dublin, First Published Jun 27, 2022, 9:18 AM IST

இந்திய அணி அயர்லாந்துக்கு சென்று 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. இந்த தொடரில் இந்திய அணி ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியில் ஆடிவருகிறது.

முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் இளம் ஃபாஸ்ட் பவுலர் உம்ரான் மாலிக் அறிமுகமானார்.

இந்திய அணி:

ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல், உம்ரான் மாலிக்.

இதையும் படிங்க - TNPL 2022: ஹரி நிஷாந்த் அதிரடி அரைசதம்.. லைகா கோவை கிங்ஸை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அபார வெற்றி

அயர்லாந்து அணி:

பால் ஸ்டர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி (கேப்டன்), காரெத் டிலானி, ஹாரி டெக்டார், லார்கன் டக்கர் (விக்கெட்கீப்பர்), ஜார்ஜ் டாக்ரெல், மார்க் அடைர், ஆண்டி மெக்ப்ரின், க்ரைக் யங், ஜோஷூவா லிட்டில், கானார் ஆல்ப்.

மழையால் ஆட்டம் நீண்ட நேரம் தாமதமானதால் ஆட்டம் 12 ஓவர்களாக குறைத்து நடத்தப்பட்டது. முதலில் பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணியின் டாப் 3 முக்கியமான வீரர்களான ஸ்டர்லிங்(4), பால்பிர்னி (0), டிலானி (8) ஆகிய மூவரும் முதல் 4 ஓவர்களில் ஆட்டமிழந்தனர்.  அதன்பின்னர் 4ம் வரிசையில் இறங்கிய ஹாரி டெக்டார் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். காட்டடி அடித்த டெக்டார் 33 பந்தில் 64 ரன்களை குவித்தார்.

இதையும் படிங்க - T20 WC இந்திய அணியிலிருந்து தூக்கி எறியப்படும் ரோஹித், கோலி, ராகுல்..? அணியின் நலன் கருதி அதிரடி முடிவு

டெக்டார் காட்டடி அடித்ததற்கு மத்தியிலும் அருமையாக பந்துவீசிய யுஸ்வேந்திர சாஹல் 3 ஓவரில் வெறும் 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார். டெக்டாரின் அதிரடியால் 12 ஓவரில் 108 ரன்களை குவித்தது அயர்லாந்து அணி.

12 ஓவரில் 109 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரராக இஷான் கிஷனுடன் தீபக் ஹூடா இறக்கிவிடப்பட்டார். தனக்கான  வாய்ப்புக்காக காத்திருந்த ஹூடா, இந்த வாய்ப்பை பயன்படுத்தி அதிரடியாக பேட்டிங் ஆடி 29 பந்தில் 47 ரன்கள் அடித்தார். இஷான் கிஷன் 11 பந்தில் 26 ரன்களை விளாச, ஹூடாவும் இஷான் கிஷனும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுக்க, ஹர்திக் பாண்டியா 12 பந்தில் 24 ரன்கள் அடிக்க, 10வது ஓவரிலேயே இலக்கை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி.

இதையும் படிங்க - என்னது ஜடேஜாவுக்கே டி20 உலக கோப்பை அணியில் இடம் இல்லையா..? ஜடேஜா இடத்தை தட்டித்தூக்கிய தரமான வீரர்

ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியில் இந்திய அணி ஆடிய முதல் போட்டியிலேயே அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios