T20 WC இந்திய அணியிலிருந்து தூக்கி எறியப்படும் ரோஹித், கோலி, ராகுல்..? அணியின் நலன் கருதி அதிரடி முடிவு
ரோஹித், கோலி, ராகுல் ஃபார்முக்கு வராமல் இதேமாதிரி சொதப்பலாக பேட்டிங் ஆடும் பட்சத்தில் இந்திய அணியின் நலன் கருதி டி20 உலக கோப்பைக்கான அணியில் அவர்களை நீக்க தயங்கக்கூடாது என்று சபா கரீம் கருத்து கூறியுள்ளார்.
டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் - நவம்பரில் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி20 உலக கோப்பை நெருங்கிவரும் நிலையில், ஐபிஎல்லில் ரோஹித் மற்றும் கோலி ஆகிய 2 முக்கியமான பெரிய வீரர்களும் சரியாக ஆடாதது இந்திய அணிக்கு கவலையளிக்கும் விதமாக அமைந்தது.
விராட் கோலி இரண்டரை ஆண்டுகளாக ஃபார்மில் இல்லாமல் தவித்துவருகிறார். இந்த இரண்டரை ஆண்டுகளில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. ஆனால் ரோஹித் சர்மா ஓரளவிற்கு நன்றாகத்தான் ஆடிவந்தார். ஐபிஎல்லில் என்னவோ சோபிக்கவில்லை.
ஐபிஎல்லில் 14 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. ஐபிஎல்லில் 14 போட்டிகளில் 19.14 என்ற மோசமான சராசரியுடன் வெறும் 248 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார் ரோஹித். ரோஹித் சர்மாவின் மோசமான ஃபார்ம் கவலையளிக்கும் நிலையில், இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ரோஹித் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அதேபோல விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் ஃபார்மில் இல்லை. இந்திய அணியின் டாப் 3 மற்றும் முக்கியமான வீரர்களான ரோஹித், கோலி, ராகுல் ஆகிய மூவரும் சொதப்பிவரும் நிலையில், இந்திய அணியில் இடம்பிடிக்க திறமையான அதிரடி வீரர்கள் பலர் வரிசைகட்டி நிற்பதால், தேவைப்பட்டால் அவர்கள் மூவரையும் அணியிலிருந்து ஒதுக்க தயங்கக்கூடாது என்று சபா கரீம் கருத்து கூறியுள்ளார்.
இதையும் படிங்க - என்னது ஜடேஜாவுக்கே டி20 உலக கோப்பை அணியில் இடம் இல்லையா..? ஜடேஜா இடத்தை தட்டித்தூக்கிய தரமான வீரர்
இதுகுறித்து பேசிய சபா கரீம், தேர்வாளர்களுக்கு மிகவும் கடினமான முடிவுகளை எடுக்க நேரிடும். ரோஹித், கோலி, ராகுல் ஆகிய மூவரும் அணிக்கு திரும்பியவுடன் ஆடும் லெவனில் இடம்பெறுவார்கள். அவர்கள் மூவரும் அவர்களது பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு பேட்டிங்கில் மேம்பட வேண்டும். அப்படி இல்லாமல், அவர்கள் தொடர்ந்து சொதப்பும் பட்சத்தில், அணி நிர்வாகமும் தேர்வாளர்களும், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கடினமான முடிவை எடுக்க வேண்டும். அணியின் நலன் கருதி முடிவெடுக்க வேண்டும் என்று சபா கரீம் கருத்து கூறியுள்ளார்.