இப்ப மட்டுமில்ல; இனி எப்பவுமே அவன் கேப்டனாக முடியாது.. மோசமான கேப்டன்! ரோஹித் இல்லைனா அவருதான் கேப்டன்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் ரோஹித் சர்மா ஆடாதபட்சத்தில் ரிஷப் பண்ட்டை கேப்டனாக நியமித்துவிடக்கூடாது என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கருத்து கூறியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து இடையே கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1ம் தேதி முதல் எட்ஜ்பாஸ்டனில் நடக்கிறது. இந்த போட்டிக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகிவரும் நிலையில், கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு கொரோனா பாசிட்டிவ் ஆனது.
லெய்செஸ்டெர்ஷைர் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் ஆடியபோது ரோஹித்துக்கு கொரோனா உறுதியானது. அதனால் தான் அந்த பயிற்சி போட்டியின் 2வது இன்னிங்ஸில் ரோஹித் பேட்டிங் ஆடவில்லை. கேஎல் ராகுலும் காயத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் மயன்க் அகர்வால் அணியில் எடுக்கப்பட்டார்.
இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள்! சேவாக்கின் தேர்வில் கோலிக்கு இடம் இல்ல
ரோஹித் இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்பாக கொரோனாவிலிருந்து மீண்டு வந்துவிடுவார் என்று நம்பப்படுகிறது. ஒருவேளை அவர் ஆடமுடியாத பட்சத்தில் யார் கேப்டன்சி செய்வார் என்பதுதான் பெரும் கேள்வியாக இருக்கிறது.
ரோஹித்துக்கு ஓய்வளிக்கப்பட்ட தென்னாப்பிரிக்க டி20 தொடரில் ரிஷப் பண்ட் தான் இந்திய அணியை வழிநடத்தினார். ஆனால் ஐபிஎல்லிலும் சரி, தென்னாப்பிரிக்க தொடரிலும் சரி, ரிஷப் பண்ட் ஒரு கேப்டனாக சிறப்பாக செயல்படவில்லை. ஒரு கேப்டனாக தனது திறமையை நிரூபிக்க தவறிவிட்டார். கேப்டன்சியில் தொடர்ந்து சொதப்பிவருகிறார். கேப்டன்சி செய்யும்போது அவரது பேட்டிங்கும் மோசமாக இருக்கிறது. கேப்டன்சியில் முதிர்ச்சியும் பக்குவமும் இல்லை.
இதையும் படிங்க - பையன் செம டேலண்ட்.. ஐபிஎல்லில் கண்டிப்பா ஆடுவான்! அயர்லாந்து இளம் வீரருக்கு பேட் கொடுத்து புகழ்ந்த பாண்டியா
ஆனாலும் அவர் தான் ரோஹித், ராகுல் இல்லாத நேரங்களில் கேப்டன்சி செய்கிறார். எனவே அவர் கேப்டனாக நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி உள்ளது. ஆனால் ரோஹித் ஆடாதபட்சத்தில் கோலியோ அல்லது அஷ்வினோ தான் கேப்டன்சி செய்ய வேண்டுமே தவிர, முதிர்ச்சியற்ற ரிஷப் பண்ட்டிடம் கேப்டன்சியை கொடுக்கக்கூடாது என்பது பலரது கருத்து.
இதையும் படிங்க - உலக கோப்பை வின்னிங் கேப்டனுக்கு நேர்ந்த பரிதாபம்.. இயன் மோர்கன் ஓய்வு..! இங்கி.,அடுத்த கேப்டன் இவரா..?
அதே கருத்தைத்தான் பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியாவும் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பேசிய டேனிஷ் கனேரியா, ரிஷப் பண்ட் பக்குவமில்லாத கேப்டன். ரோஹித் சர்மா ஆடவில்லை என்றால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் கோலி அல்லது அஷ்வின் ஆகிய இருவரில் ஒருவர் தான் கேப்டன்சி செய்ய வேண்டும். தென்னாப்பிரிக்க டி20 தொடரில் பண்ட் மோசமாக கேப்டன்சி செய்தார். ரிஷப் பண்ட் இனிமேல் கேப்டன்சி செய்ய வாய்ப்பே இல்லை. பும்ராவை கேப்டனாக செயல்படவைத்து, அவருக்கு அதிக பணிச்சுமையை கொடுக்கக்கூடாது. ஏனெனில் அப்போதுதான் அவரால் டெஸ்ட் கிரிக்கெட்டில் பவுலிங்கில் கவனம் செலுத்த முடியும் என்றார் கனேரியா.