புதிய ஜெர்சியுடன் போட்டோஷூட் எடுத்த இந்திய வீரர்கள்: வைரலாகும் புகைப்படம்!

அடிடாஸ் வெளியிட்டுள்ள புதிய ஜெர்சிகளுடன் இந்திய அணி வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட பிரபலங்கள் போட்டோஷூட் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Rohit Sharma and Virat Kohli Photo Shoot with Team India Test, ODI New Jersey

இந்திய அணியின் கிட் ஸ்பான்ஸராக 2016லிருந்து 2020 வரை நைக் நிறுவனம் இருந்தது. அதைத்தொடர்ந்து 2020லிருந்து இந்திய கிரிக்கெட் அணியின் கிட் ஸ்பான்ஸராக இருந்து வந்த எம்பிஎல் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிந்தது. இந்திய அணியின் மெயின் ஸ்பான்ஸராக பைஜூஸ் நிறுவனம் இருந்து வந்தது. இந்நிலையில், புதிய கிட் ஸ்பான்ஸராக அடிடாஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது பிசிசிஐ. வரும் 7ம் தேதி தொடங்கும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இருந்து அடிடாஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் தொடங்குகிறது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணிக்கு புதிய ஜெர்சி! ஆஸி.யை வீழ்த்த ராசியாக இருக்குமா?

மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடும் வீரர்களுக்கான சீருடையை வெளியிட்டுள்ளது. அதில் சிறப்பு அம்சமாக தோள் பகுதியில் 3 கோடுகள் இடம்பெற்றுள்ளன. கடந்த 1ம் ஆம் தேதி அடிடாஸ் நிறுவன் இந்திய அணியின் புதிய ஜெர்சியை அறிமுகம் செய்து வீடியோ வெளியிட்டது. அதில், டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான ஜெர்சி இடம் பெற்றிருந்தது.

ரயில் விபத்து குறித்து கேள்விப்பட்டு வேதனை அடைந்தேன் – விராட் கோலி!

 

 

புதிய ஜெர்சியில் பொதுவான அம்சமாக தோள்பட்டைப் பகுதியில் மூன்று கோடுகள் உள்ளன. இது டெஸ்ட் ஜெர்சியில் அடர்நீல நிறத்தில் மூன்று கோடுகள் காணப்படுகின்றன. நீல நிறத்தில் உள்ள ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான ஜெர்சியில் வெள்ளை நிறத்தில் மூன்று கோடுகள் இருக்கின்றன.

 

 

தோனி சொல்லியும் கேட்காத இலங்கை: தனக்கு தானே ஆப்பு வச்சுக் கொண்டு புலம்பல்!

இதையடுத்து தற்போது இந்திய வீரர்கள் டெஸ்ட் போட்டி, டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கான ஜெர்சியுடன் போட்டோஷூட் செய்துள்ளனர். ரோகித் சர்மா, விராட் கோலியின் போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதே போன்று பெண்களுக்கான கிரிக்கெட்டில் ஸ்மிருதி மந்தனா புதிய ஜெர்சியுடன் போஸ் கொடுத்துள்ளார்.

ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தி 4ஆவது முறையாக இந்தியா சாம்பியன்!

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios