ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தி 4ஆவது முறையாக இந்தியா சாம்பியன்!
ஓமனில் நடந்த ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி சாதனை படைத்தது.
ஓமன் நாட்டில் உள்ள சலாலா என்ற பகுதியில் ஆண்களுக்கான 10ஆவது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாப்பி போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது. இதில், 10 அணிகள் பங்கேற்று விளையாடின. கடைசியாக இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் முன்னேறின. இதையடுத்து, இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் போட்டி தொடங்கிய 13ஆவது நிமிடத்தில் இந்தியாவின் அங்கத் பிர் சிங் முதல் கோல் அடித்தார்.
இம்பேக்ட் பிளேயர் விதிமுறையுடன் டிஎன்பிஎல்: இன்று 3 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட் விற்பனை!
அதன் பிறகு அரைஜீத் சிங் ஹூண்டால் 20ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இறுதியாக இந்தியா 2 – 1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக 4ஆவது முறையாக ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா சாம்பியனாகியுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் ஒரு கிங் என்று நிரூபித்த ஜோ ரூட்; 11,000 ரன்களை கடந்து சாதனை!
இதற்கு முன்னதாக கடந்த 2004, 2008 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியை இந்தியா கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத்தில் உயரமான ஒற்றுமை சிலையை நிறுவ தோனிக்கு அழைப்பு விடுத்த கூடுதல் தலைமைச் செயலாளர்!