குஜராத்தில் உயரமான ஒற்றுமை சிலையை நிறுவ தோனிக்கு அழைப்பு விடுத்த கூடுதல் தலைமைச் செயலாளர்!

குஜராத்தில் உலகத்திலேயே உயரமான சிலையான ஒற்றுமை சிலையை நிறுவ தோனிக்கு குஜராத் கூடுதல் தலைமைச் செயலாளர் முகேஷ் பூரி அழைப்பு விடுத்துள்ளார்.

Gujarat Additional Chief Secretary has invited MS Dhoni to Come and Explore the statue of Unity

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடந்தது. இதில், முதலில் ஆடிய குஜராத் அணி 214 ரன்கள் குவித்தது. பின்னர் சிஎஸ்கே அணி ஆடிய போது மழை பெய்தது. இதையடுத்து போட்டி15 ஓவர்களாகவும், சிஎஸ்கேயின் வெற்றிக்கு 171 ரன்கள் என்றும் நிர்ணயிக்கப்பட்டது.

அறிமுக போட்டியில் வள்ளலான மதீஷா பதிரனா 16 வைடுகள் வீசி சாதனை: ஆப்கானிஸ்தான் எளிய வெற்றி!

இதையடுத்து டெவான் கான்வே, ருத்துராஜ் கெய்க்வாட் நல்ல தொடக்கம் கொடுக்கவே, ரவீந்திர ஜடேஜா சரியான முறையில் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். கடைசி பந்தில் வெற்றி பெற்று சிஎஸ்கே அணி 5ஆவது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது.

Wrestlers கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்: 1983ல் உலகக் கோப்பை வென்ற கபில்தேவ் உள்ளிட்ட வீரர்கள் அறிக்கை!

இந்த ஐபிஎல் சீசன் முழுவதும் முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்த தோனி கடைசியாக அதற்கு அறுவை சிகிச்சையும் செய்து கொண்டுள்ளார். மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் முழங்கால் வலிக்கு தோனி அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. இன்னும், 6 மாத காலத்திற்கு தோனி ஓய்வில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஐபிஎல்லில் வெற்றிகரமான டீம் எது? ஜாலியாக சண்டை போட்டுக் கொண்ட பொல்லார்டு, பிராவோ!

இந்த நிலையில், 5ஆவது முறையாக ஐபிஎல் டிராபியை கைப்பற்றிய தோனிக்கு வாழ்த்து தெரிவித்த குஜராத் கூடுதல் தலைமை செயலாளர் மகேஷ் பூரி, அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதாவது உலகிலேயே உயரமான சிலையான ஒற்றுமை சிலையை நிறுவுவதற்கு தோனிக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், எப்போது என்பது குறித்து எந்த தகவலும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios