ஐபிஎல்லில் வெற்றிகரமான டீம் எது? ஜாலியாக சண்டை போட்டுக் கொண்ட பொல்லார்டு, பிராவோ!

சென்னை மற்றும் மும்பை அணிகளில் எந்த அணி சிறந்தது என்பதில், பொல்லார்டு மற்றும் டுவைன் பிராவோ ஆகியோர் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Which is the most successful team in IPL? Pollard who had a fun fight with bravo!

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இதில், 5ஆவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளது. இதுவரையில் விளையாடிய 14 சீசன்களில் 5 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதோடு, 10 முறை இறுதிப் போட்டிக்கும், 12 முறை பிளே ஆஃப் சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளது.

ரன் அவுட்டால் சதத்தை கோட்டைவிட்ட சரித் அசலங்கா!

இதன் காரணமாக சென்னை தான் சிறந்தது என்று சிஎஸ்கே ரசிகர்களும், இல்லை இல்லை மும்பை தான் சிறந்தது என்று மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களும் சமூக வலைதளங்களில் சண்டையிட்டு வந்துள்ளனர். சமூக வலைதளங்களில் இது போன்ற சண்டைகள் நடப்பது என்னவோ புது அல்ல. ஆனால், இதுவே சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர்களிடையே நடந்தது தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி சொல்றது ஈஸி, கஷ்டமானது அடுத்த சீசனுக்காக 9 மாசம் கடினமாக உழைக்கனும் – தோனி!

சிஎஸ்கே பவுலிங் பயிற்சியாளர் பிராவோவும், மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்டும் இந்த சண்டையில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக இருவரும் பேசும் வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், மும்பை அணியே ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான அணி என்று பொல்லார்டு கூறுகிறார்.

விராட் கோலி, புஜாராவை காலி செய்தால் ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பு – ரிக்கி பாண்டிங்!

ஒட்டுமொத்தமாக 17 கோப்பைகளை நான் வென்றிருக்கிறேன். ஆனால், அனைத்து லீக் தொடர்களிலும் மொத்தமாக 15 கோப்பைகளை தான் வென்றிருக்கிறார். ஆதலால், எனக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று பிராவோ கூறுகிறார். இப்படி மாறி மாறி ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios