அறிமுக போட்டியில் வள்ளலான மதீஷா பதிரனா 16 வைடுகள் வீசி சாதனை: ஆப்கானிஸ்தான் எளிய வெற்றி!
இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி இன்று நடந்தது. இதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணிக்கு சரித் அசலங்கா 95 பந்துகளில் 91 ரன்கள் சேர்த்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
தனஞ்ஜெயா டி சில்வா 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக இலங்கை 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 268 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணியில் குர்பாஸ் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் இப்ராஹிம் சத்ரான் 98 பந்துகளில் 11 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் உள்பட 98 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 2 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார். இதே போன்று ரஹ்மத் ஷா 55 ரன்களில் வெளியேறினார். ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 38 ரன்களில் ஆட்டமிழக்க. கடைசியாக முகமது நபி மற்றும் நஜிபுல்லா சத்ரான் ஆகியோர் கடைசி வரை களத்தில் நின்று அணிக்கு வெற்றி தேடி கொடுத்தனர்.
ஐபிஎல்லில் வெற்றிகரமான டீம் எது? ஜாலியாக சண்டை போட்டுக் கொண்ட பொல்லார்டு, பிராவோ!
இறுதியாக ஆப்கானிஸ்தான் 46.5 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 269 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இலங்கை அணியில் அறிமுகமான மதீஷா பதிரனா 8.5 ஓவர்களில் ஒரு விக்கெட் கைப்பற்றி 66 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார். இதில், 16 வைடுகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றதன் மூலமாக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி வரும் 4ஆம் தேதி நடக்க இருக்கிறது.
ரன் அவுட்டால் சதத்தை கோட்டைவிட்ட சரித் அசலங்கா!