இம்பேக்ட் பிளேயர் விதிமுறையுடன் டிஎன்பிஎல்: இன்று 3 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட் விற்பனை!
வரும் 12 ஆம் தேதி தொடங்கவுள்ள தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடருக்கான லீக் போட்டி டிக்கெட் விற்பனை இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் என்று சொல்லப்படும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 3 முறை டைட்டில் கைப்பற்றியுள்ளது டூட்டி பேட்ரியாட்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் தலா ஒரு முறை டைட்டில் வென்றுள்ளன. வெற்றி பெற்ற அணிக்கு ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் ஒரு கிங் என்று நிரூபித்த ஜோ ரூட்; 11,000 ரன்களை கடந்து சாதனை!
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் என்று அழைக்கப்படும் டிஎன்பிஎல் தொடரின் 7ஆவது சீசன் வரும் 12 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த சீசனில் IDream திருப்பூர் தமிழன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், LYCA கோவை கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் Siechem மதுரை பாந்தர்ஸ் என்று மொத்தம் 8 அணிகள் பங்கேற்க உள்ளன.
குஜராத்தில் உயரமான ஒற்றுமை சிலையை நிறுவ தோனிக்கு அழைப்பு விடுத்த கூடுதல் தலைமைச் செயலாளர்!
கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம் ஆகிய பகுதிகளில் இந்த டிஎன்பிஎல் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் தொடங்கவுள்ளது. இந்த சீசனுக்கான தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 தொடருக்கான அட்டவணை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டது. அதன்படி இந்த 8 அணிகள் பங்கேற்கும் டிஎன்பிஎல் டி20 போட்டி வரும் 12 ஆம் தேதி தொடங்கி ஜூலை 12 ஆம் தேதி வரையில் நடக்கிறது.
அறிமுக போட்டியில் வள்ளலான மதீஷா பதிரனா 16 வைடுகள் வீசி சாதனை: ஆப்கானிஸ்தான் எளிய வெற்றி!
ஒவ்வொரு அணிக்கும் 7 போட்டிகள் வீதம் மொத்தம் 28 லிக் போட்டிகள் மற்றும் 4 பிளே ஆப் போட்டிகள் என்று 32 போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த சீசன் முதல், ஐபிஎல் கிரிக்கெட்டைப் போன்று இம்பேக்ட் பிளேயர் விதியும் பின்பற்றப்படவுள்ளது. டிஆர்எஸ் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. பிளே ஆஃப் போட்டிகள் மழையால் பாதிகப்பட்டால் ரிசர்வ் டே என்று சொல்லக் கூடிய அடுத்த நாள் அல்லது மாற்று தேதியில் போட்டி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.