ரயில் விபத்து குறித்து கேள்விப்பட்டு வேதனை அடைந்தேன் – விராட் கோலி!
ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து குறித்து கேள்விப்பட்டு தான் மன வேதனை அடைந்ததாக இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கூறியுள்ளார்.
பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமர்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட விபத்தில், கோரமண்டல் ரயில் மற்றும் பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 1000க்கும் மேற்பட்ட பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
தோனி சொல்லியும் கேட்காத இலங்கை: தனக்கு தானே ஆப்பு வச்சுக் கொண்டு புலம்பல்!
பாலாசோரில் நேற்றிரவு நடந்த விபத்து காட்டுப்பகுதி என்பதால் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் 500க்கும் மேற்பட்ட மீட்பு பணியாளர்கள் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தி, காயமடைந்தவர்களை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தி 4ஆவது முறையாக இந்தியா சாம்பியன்!
இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக இந்திய வீரர்கள் இங்கிலாந்தில் முகாமிட்டுள்ள நிலையில், விராட் கோலி ரயில் விபத்து குறித்து டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ஒடிசாவில் நடந்த பயங்கர ரயில் விபத்து குறித்து கேள்விப்பட்டு வேதனை அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இம்பேக்ட் பிளேயர் விதிமுறையுடன் டிஎன்பிஎல்: இன்று 3 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட் விற்பனை!
விராட் கோலியைத் தொடர்ந்து கௌதம் காம்பீரும் ரயில் விபத்து குறித்து டுவிட்டரில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ஒடிசாவில் உயிர் இழப்புகளால் பேரழிவு ஏற்பட்டது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கடவுள் வலிமை தரட்டும். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். தேசம் உங்களுடன் நிற்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.