தோனி சொல்லியும் கேட்காத இலங்கை: தனக்கு தானே ஆப்பு வச்சுக் கொண்டு புலம்பல்!
மதீஷா பத்திரனாவை டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் மிக முக்கியமான போட்டிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் தோனி சொல்லியும் கேட்கவில்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியின் செல்லப்பிள்ளையாக வலம் வந்தவர் மதீஷா பதிரனா. முக்கியமான போட்டிகளில் எல்லாம் முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி தோனிக்கு நம்பிக்கை அளித்தார். பதிரனாவின் குடும்பத்தாரிடமும் நான் இருக்கும் போது அவரைப் பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை என்று கூறியிருந்தார். மதீஷா பத்திரானவின் பவுலிங் திறமையை கண்டு வியந்த தோனி, இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார்.
ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தி 4ஆவது முறையாக இந்தியா சாம்பியன்!
அதில், டி20 போட்டிகளுக்கு மட்டும் மதீஷா பதிரனாவை பயன்படுத்த வேண்டும், ஒரு நாள் கிரிக்கெட்டில் முக்கியமான போட்டியில் பதிரனாவை பயன்படுத்தலாம் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். டெஸ்ட் போட்டிக்கு பதிரானாவை களமிறக்க கூடாது என்றும் வலியுறுத்தி இருந்தார். ஐசிசி தொடர்களில் பதிரானாவை பயன்படுத்துங்கள். அவர் இலங்கை அணியின் சொத்து என்று கூறியிருந்தார்.
இம்பேக்ட் பிளேயர் விதிமுறையுடன் டிஎன்பிஎல்: இன்று 3 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட் விற்பனை!
இந்த நிலையில், தான் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இலங்கை அணியில் மதீஷா பதிரனா அறிமுகம் செய்யப்பட்டார். ஆனால், இந்தப் போட்டியில் 8.5 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் கைப்பற்றி 66 ரன்கள் கொடுத்துள்ளார். இதில், 16 வைடுகளும் அடங்கும். இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் தொடரை கைப்பற்றியது.
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி நாளை நடக்கிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் ஒரு கிங் என்று நிரூபித்த ஜோ ரூட்; 11,000 ரன்களை கடந்து சாதனை!