நான் தூங்கியதால் விபத்து ஏற்பட்டது: நொடிப் பொழுதில் உயிர் பிழைத்த ரிஷப் பண்ட் ஓபன் டாக்!

எதிர்பாராத விதமாக தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக சிகிச்சையிலிருந்து கண் விழித்த பின் காவல் துறை அதிகாரிகளிடம் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.

Rishabh Pant explain about how an accident happened early morning today

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இன்று அதிகாலையில் எதிர்பாராதவிதமாக கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உத்தரகாண்ட் அருகில் ரூர்க்கியின் நர்சன் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. இதையடுத்து, அருகிலிருந்தவர்கள் ரிஷப் பண்ட்டை மீட்டு ரூர்கியில் உள்ள ஷாக்‌ஷம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது, டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ரிஷப் பண்ட் சென்ற கார் விபத்து: பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!

இந்த விபத்து குறித்து பேசிய ரிஷப் பண்ட் கூறுகையில், நான் தான் காரை ஓட்டி வந்தேன். எதிர்பாராத விதமாக கண் அசந்து தூங்கிவிட்டேன். இதனால், இந்த விபத்து ஏற்பட்டது. எனினும், என்னால் வெளியில் வர முடியவில்லை. அதன் பிறகு கார் கண்ணாடியை உடைத்துக் கொண்டு தான் வெளியே வந்தேன். சிறிது நேரத்திலேயே கார் தீப்பற்றி எரிந்தது என்று காவல் துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

எலும்பியல் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்களின் கண்காணிப்பில் ரிஷப் பண்ட்: டேராடூன் மருத்துவர் ஆஷிஸ்

மெர்சிடஸ் பென்ஸ் காரில் சென்ற ரிஷப் பண்ட் கண் அசந்து தூங்கியதால், கார் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. சிறிது நேரத்திலேயே கார் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில், ரிஷப் பண்ட்டுக்கு, நெற்றிப் பகுதியில் 2 இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. வலது முழங்காலில் ஒரு தசைநார் கிழிந்துள்ளது. அவரது வலது மணிக்கட்டு, கணுக்கால், கால் விரல் ஆகியவற்றிலும் காயம் ஏற்பட்டுள்ளது. முதுகுப் பகுதியில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், எலும்பியல் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் டேராடூன் மேக்ஸ் மருத்துவமனை மருத்துவர் ஆஷிஸ் யாக்னிக் தெரிவித்துள்ளார்.

ரிஷப் பண்ட் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்த கிரிக்கெட் பிரபலங்கள்!

 

தேவைப்பட்டால் இன்னும் ஒரிரு நாட்களில் ரிஷப் பண்ட் டெல்லி மருத்துவமனைக்கு மாற்றப்படுவார் என்று டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரிஷப் பண்ட்டிற்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களுடன் மருத்துவக் குழு தொடர்பில் இருக்கும் நிலையில், ரிஷப் பண்ட்டின் குடும்பத்தாருடன் பிசிசிஐ தொடர்ந்து தொடரில் உள்ளது என்று பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios