எலும்பியல் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்களின் கண்காணிப்பில் ரிஷப் பண்ட்: டேராடூன் மருத்துவர் ஆஷிஸ்
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் எலும்பியல் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக டேராடூன் மருத்துவர் ஆஷிஸ் யாக்னிக் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்றது. 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. வங்கதேச அணிக்கு எதிராக நடந்த 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இடம் பெறாத ரிஷப் பண்ட், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
92 முறை ஹாட்ரிக் கோல் அடித்து உலக சாதனை படைத்தவர் பீலே!
இந்த நிலையில், உத்தரகாண்டிலிருந்து டெல்லி நோக்கி மெர்சிடஸ் பென்ஸ் காரில் சென்ற கொண்டிருந்த ரிஷப் பண்ட், முகமதுபூர் ஜல் அருகிலுள்ள ரூர்க்கியின் நரசன் எல்லைப்பகுதியில் சென்ற போது அவரது கார், கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து அவர் உடனடியாக ரூர்கியில் உள்ள ஷாக்ஷம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பிரகு டேராடூன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த விபத்தில் அவருக்கு தலை மற்றும் முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.
ரிஷப் பண்ட் சென்ற கார் விபத்து: பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!
ரிஷப் பண்ட் உடலுக்கு எந்த ஆபத்தும் இல்லை. காரில் இருந்த பாதுகாப்பு அம்சங்கள் அவரது உயிரை காப்பற்றியது. எனினும், முழங்கால் பகுதியில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது, குறைந்தது ஒரு வருடம் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ரிஷப் பண்ட் உடல் நிலை குறித்து டேராடூன் மேக்ஸ் மருத்துவமனை மருத்துவர் ஆஷிஸ் யாக்னிக் கூறியிருப்பதாவது: எலும்பியல் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்களின் தீவிர கண்காணிப்பில் ரிஷப் பண்ட் உள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவர் முழுமையாக பரிசோதிக்கப்பட்ட பின்னர் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்படும். அதன் பிறகு அடுத்தகட்ட பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ரிஷப் பண்ட் இடம் பெறவில்லை. டி20 போட்டிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போன்று ஒரு நாள் போட்டிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். வரும் ஜனவரி 3 ஆம் தேதி இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH | Uttarakhand: Cricketer Rishabh Pant shifted to Max Hospital Dehradun after giving primary treatment at Roorkee Civil Hospital. His car met with an accident near Roorkee pic.twitter.com/YTvArj8qxc