Asianet News TamilAsianet News Tamil

ரிஷப் பண்ட் சென்ற கார் விபத்து: பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட் சென்ற கார் விபத்துக்குள்ளானதில், பலத்த காயத்துடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Indian Cricketer Rishabh Pant has suffered a serious car accident today at uttarakhand
Author
First Published Dec 30, 2022, 9:30 AM IST

வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ரிஷப் பண்ட் விளையாடினார். இதைத் தொடர்ந்து இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் ரிஷப் பண்ட் இடம் பெறவில்லை.

Indian cricketer Rishabh Pant injured in a major accident, car catches fire.
Get well soon 🙏🙏🙏 pic.twitter.com/bLRao6tUKN

 

டி20 போட்டிகளுக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த ரிஷப் பண்ட் எதிர்பாராத விதமாக கார் விபத்தில் சிக்கியுள்ளார்.

Pele Death: 'கறுப்பு முத்து' சகாப்தம் முடிந்தது!கால்பந்து உலகின் முடிசூடா மன்னன் பிரேசில் வீரர் பீலே காலமானார்

உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் ரிஷப் பண்ட் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இதில், ரிஷப் பண்ட் நெற்றிப் பகுதி, முதுக்குப் பகுதி ஆகிய இடங்களில் பலத்த காயத்துடன் ரூர்க்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது ரிஷப் பண்ட் உடலுக்கு எந்த ஆபத்தும் இல்லை. காரில் இருந்த பாதுகாப்பு அம்சங்கள் அவரது உயிரை காப்பற்றியது. எனினும், முழங்கால் பகுதியில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. குறைந்தது ஒரு வருடம் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள எம் ஆர் ஐ ஸ்கேன் முடிவுகள் இன்னும் வரவில்லை. புத்தாண்டு தினத்தை தாயுடன் சென்று கொண்டாட காரில் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Pele Dead : உலகப் புகழ் பெற்ற கால்பந்தாட்ட வீரர் பீலே காலமானார்!

BBL: அஷ்டான் டர்னர் அதிரடி அரைசதம்.. மெல்பர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அபார வெற்றி

Follow Us:
Download App:
  • android
  • ios