ரிஷப் பண்ட் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்த கிரிக்கெட் பிரபலங்கள்!
கார் விபத்தில் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பண்ட் விரைவில் குணமடைய வேண்டி ரிக்கி பாண்டிங், விவிஎஸ் லட்சுமணன், ஜுலான் கோஸ்வாமி, ஹர்ஷா போக்ளே, லிட்டன் தாஸ், அபினவ் முகுந்த் என்று ஏராளமான கிரிக்கெட் பிரபலங்கள் பிரார்த்தனை செய்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த நிலையில், டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று, வங்கத்திற்கு தகுந்த பதிலடி கொடுத்தது. ஒரு நாள் தொடரில் இடம் பெறாத ரிஷப் பண்ட் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்று சிறப்பான தனது ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த நிலையில், உத்தரகாண்டிலிருந்து டெல்லி நோக்கி சென்ற கொண்டிருந்த போது ரூர்கி அருகில் ரிஷப் பண்ட் சென்ற மெர்சிடஸ் பென்ஸ் கார் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானதில் கார் முழுவதுமாக எரிந்ததோடு, ரிஷப் பண்டுக்கு நெற்றிப் பகுதியிலும், முதுகுப் பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
Watch : கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தின் கார் தீப்பிடித்து எரியும் காட்சி!
முதலில் ரூர்கி பகுதியிலுள்ள ஷாக்சம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அதன் பிறகு டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து டேராடூன் மேக்ஸ் மருத்துவமனை மருத்துவர் ஆஷிஸ் யாக்னிக் கூறியிருப்பதாவது: எலும்பியல் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்களின் தீவிர கண்காணிப்பில் ரிஷப் பண்ட் உள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவர் முழுமையாக பரிசோதிக்கப்பட்ட பின்னர் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்படும். அதன் பிறகு அடுத்தகட்ட பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இன்னும் ஒரீரு நாட்களில் டெல்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட இருக்கிறார். இந்த நிலையில், ரிஷப் பண்ட் கார் விபத்தில் காயமடைந்தது குறித்து கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர். யார் யார் என்று பார்க்கலாம்.
ரிஷப் பண்ட் சென்ற கார் விபத்து: பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!
விவிஎஸ் லட்சுமணன்:
அதிர்ஷ்டவசமாக அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டார். ரிஷப் பண்ட்டுக்காக பிரார்த்தனை செய்கிறேன். விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
ஜூலான் கோஸ்வாமி:
ரிஷப் பண்ட் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள். எங்களுடைய பிரார்த்தனையும், வாழ்த்துக்களும் எப்போதும் உங்களுடன் இருக்கும்.
லிட்டன் தாஸ்:
எண்ணங்கள் மற்றும் பிரார்த்தனைகள் எப்போதும் ரிஷப் பண்டுடன் இருக்கும். விரைவில் குணமடையுங்கள் தம்பி என்று பதிவிட்டுள்ளார்.
மனோஜ் திவாரி:
விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் சகோதரர். எங்களுடைய பிரார்த்தனை எப்போதும் உங்களுடன் இருக்கும். ஒட்டுமொத்த நாடும் உங்களது போராட்டத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறது.
அபினவ் முகுந்த்:
ரிஷப் பந்த் நன்றாக இருக்கிறார் என்று நம்புகிறேன்.
பஞ்சாப் கிங்ஸ் அணி:
ரிஷப் பண்ட் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
முனாப் படேல்:
ரிஷப் பண்ட் குறித்து சரியான செய்தியைத் தான் கேட்கிறேனா? அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்.
ஆர் பி சிங்:
விரைவில் குணமடைய வாழ்த்துக்கள். விரைவில் குணமடையுங்கள். உங்களது நல்வாழ்வுக்காக ஒட்டுமொத்த நாடும் பிரார்த்தனை செய்கிறது.
ரிக்கி பாண்டிங்:
நீங்கள் விரைவில் குணமடைந்து திரும்புவீர்கள் என்று நம்பிகிறேன் என்று ரிக்கி பாண்டிங் பதிவிட்டுள்ளார்.