ஐபிஎல் ஹீரோ ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு மறுப்பு: முதல் முறையாக டி20ல் களமிறங்கும் திலக் வர்மா!
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று சிறப்பாக ஆடி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ரிங்கு சிங்கிற்கு டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை.
ஆசிய கோப்பை கிரிக்கெட் மற்றும் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் சென்று அங்கு பயிற்சியை தொடங்கியுள்ளனர்.
சீனியர்ஸுக்கு ஓய்வு; இளம் வீரர்களுக்கு வாய்ப்பு: எங்கயோ போகும் டீம் இந்தியா; டி20 அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சீனியர் அதாவது மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, முகேஷ் குமார், உம்ரான் மாலிக் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
2023 ICC ODI உலகக் கோப்பைக்கான MA சிதம்பரம் ஸ்டேடியம் டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?
இந்தியா டி20 டீம்:
இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாஅண்டியா (கேப்டன்), அக்ஷர் படேல், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், ஆவேஷ் கான், முகேஷ் குமார்
இதில், ஜித்தேஷ் சர்மா, ரிங்கு சிங் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று 14 போட்டிகளில் விளையாடி 4 அரைசதங்கள்,31 பவுண்டரி, 29 சிக்ஸர்கள் உள்பட 474 ரன்கள் சேர்த்த ரிங்கு சிங்கிற்கு டி20 தொடரில் இடம் இல்லை. இவரது ஸ்டிரைக் ரேட் 149.33. பேட்டிங் ஆவரேஜ் என்னவோ 59.25 தான். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் மட்டும் 5 சிக்ஸர்கள் அடித்து கேகேஆர் அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்து எல்லோரது மனதிலும் ஹீரோவாக உயர்ந்து நின்றவர் ரிங்கு சிங்.
மெர்சிடஸ், பிஎம்டபிள்யூ, ஆடி காரும் கிடையாது; விராட் கோலி வாங்கிய முதல் கார் எது தெரியுமா?
இதே போன்று பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடியவர் ஜித்தேஷ் சர்மா. 14 போட்டிகளில் விளையாடி 309 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால், ஒரு போட்டியில் கூட அரைசதம் எடுக்கவில்லை. அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 156 வைத்துள்ளார். இவருக்கும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இடம் அளிக்கப்படவில்லை.
ஹைதராபாத்தைச் சேர்ந்த திலக் வர்மா, நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடினார். இடது கை பேட்ஸ்மேனான திலக் வர்மா ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் விளையாடி 343 ரன்கள் எடுத்துள்ளார். இதில், அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கவில்லை. மேலும், ஸ்டிரைக் ரேட் 164 வைத்துள்ளார். பேட்டிங் ஆவரேஜ் 42.88. இந்த நிலையில் தான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியில் திலக் வர்மா இடம் பெற்றுள்ளார்.
டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இடம் பெற்றுள்ள ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இடம் அளிக்கப்படவில்லை. சஞ்சு சாம்சன் டி20 தொடரில் இடம் பெற்றுள்ளார். வரும் 2024 ஆம் ஆண்டில் டி20 உலகக் கோப்பை தொடர் நடக்க உள்ள நிலையில், டி20 அணியை வலுப்படுத்தவே இப்படியொரு யுக்தியை இந்திய தேர்வுக்குழு எடுத்துள்ளதாக தெரிகிறது.
இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக அஜித் அகர்கர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது இந்திய அணியில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.