2023 ICC ODI உலகக் கோப்பைக்கான MA சிதம்பரம் ஸ்டேடியம் டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டி நடக்கிறது.

ICC Cricket World Cup 2023 Ticket Price Varies From Rs 1000 to Rs 10000 for MA Chidambaram Stadium

ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. உலகக் கோப்பைக்கான அட்டவணை சமீபத்தில் வெளியானது. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டி மூலமாக இலங்கை உலகக் கோப்பைக்குள் நுழைந்தது. இதையடுத்து 10ஆவது அணிக்கான ரேஸில் நெதர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன.

மெர்சிடஸ், பிஎம்டபிள்யூ, ஆடி காரும் கிடையாது; விராட் கோலி வாங்கிய முதல் கார் எது தெரியுமா?

உலகக் கோப்பை தொடரானது இந்தியா முழுவதும் 10 மைதானங்களில் நடக்கிறது. அகமதாபாத் மைதானத்தில் முதல் போட்டி தொடங்குகிறது. அதே போன்று இறுதிப் போட்டியும் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது. அக்டோபர் 8ஆம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது.

எப்போதும் நம்மை நெருக்கமாக வைப்பதிருப்பது ஃப்ரண்ட்ஷிப் அண்ட் உணவு – சச்சின் டெண்டுல்கர்!

இதே போன்று எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் மட்டும், அக்டோபர் 14 – நியூசிலாந்து – வங்கதேசம், அக்டோபர் 18 நியூசிலாந்து – பாகிஸ்தான், அக்டோபர் 23 பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான், அக்டோபர் 27 பாகிஸ்தான் – தென் ஆப்பிரிக்கா என்று மொத்தம் 5 போட்டிகள் நடக்கிறது. அப்படி நடக்கும் போட்டிகளுக்கான டிக்கெட் முன்பதிவு எப்படி செய்வது, டிக்கெட் விலை எவ்வளவு என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

டிவியில் ஒளிபரப்பு இல்லை; இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் போட்டியை எப்படி பார்ப்பது?

எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம், மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் மைதானம் என்றூம் அழைக்கப்படுகிறது. உலகக் கோப்பை தொடரில் இந்தியா விளையாடும் போட்டி சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடப்பதால், டிக்கெட்டுக்கான தேவை அதிகரித்துள்ளது. போட்டி தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பாகவோ அல்லது ஒரு வாரத்திற்கு முன்பாகவோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக இந்தியா போட்டி என்றாலே டிக்கெட்டுகள் விரைவில் விற்று தீர்ந்து விடுகிறது. ஆகையால், மைதானத்திற்கு சென்று பார்க்க ஆசைப்படும் கிரிக்கெட் ரசிகர்கள் டிக்கெட் விற்பனை தொடங்கியதும் உடனே பெற்றுக் கொள்ளுங்கள். எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்திற்கான டிக்கெட் விலை ரூ. 1000 முதல் ரூ. 10,000 வரை இருக்கும். இருப்பினும், சில சிறப்பு டிக்கெட்டுகள் விலை அதிகமாக இருக்கும், அதன் விலை ரூ. 15,000 வரை இருக்கும். மேலும் டிக்கெட் விலை உங்கள் இருக்கைகளுக்கு ஏற்ப மாறுபடும். எனவே, வசதிகளுடன் கூடிய இருக்கை வேண்டுமானால், இந்த விலையுயர்ந்த டிக்கெட்டுகளை நீங்கள் முன்பதிவு செய்யலாம்.

இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவரான அஜித் அகர்கருக்கு எத்தனை கோடி சம்பளம் தெரியுமா?

எப்படி புக் செய்வது?

  1. முதலில், நீங்கள் ICC ODI உலகக் கோப்பை டிக்கெட் புக்கிங் பார்ட்னர்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்க வேண்டும், அதாவது Bookmyshow.com அல்லது paytm.com.
  2. அதன் பிறகு சிட்டியை தேர்வு செய்து, சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
  3. பின்னர், விளையாட்டு பிரிவில் கிளிக் செய்து எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியம் டிக்கெட்டுகளைத் தேட வேண்டும்.
  4. இங்கே, கால அட்டவணையின்படி ICC ODI உலகக் கோப்பை 2023 போட்டிகளைப் பார்க்கவும்.
  5. அனைத்து ICC ODI உலகக் கோப்பை போட்டிகளும் பக்கத்தில் பட்டியலிடப்பட்டு நீங்கள் விரும்பும் போட்டியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  6. அடுத்த கட்டத்தில், எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியம் இருக்கை அமைப்பில் இருந்து உங்கள் இருக்கையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  7. தேர்வுக்குப் பிறகு, மொத்தத் தொகையை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
  8. இப்போது, ​​கட்டணத்தை உறுதிப்படுத்திய பிறகு நீங்கள் மின்னஞ்சலைப் பார்க்கலாம்.
  9. எம்.ஏ. சிதம்பரம் மைதானத்திற்குள் நுழைவதற்கு இ-டிக்கெட்டுகள் பொருந்தாது என்பதை நினைவில் கொள்ளவும்.
  10. மைதானத்திற்குள் நுழைவதற்கு பாக்ஸ் ஆபிஸிலிருந்து இ-டிக்கெட்டுகளை இயற்பியல் டிக்கெட்டுகளுடன் மீட்டெடுக்க வேண்டும்.
  11. ICC ODI உலகக் கோப்பை 2023 டிக்கெட்டுகள் BookMyShow, Insider.in, TicketGenie, EventsNow மற்றும் Paytm ஆகியவற்றில் ஆன்லைனில் கிடைக்கும்.
இருக்கைகள் டிக்கெட் விலை
லோயர் டயர் (கீழ் அடுக்கு சீட்) ரூ.2500
பெவியலியன் மொட்டை மாடி ரூ.1750
அண்ணா பெவிலியன் ரூ.7500
அப்பர் டயர் (மேல் அடுக்கு சீட்) ரூ.8500
ஹாஸ்பிடாலிட்டி பாக்ஸ்  ரூ.10000
விஐபி கார்ப்பரேட் பாக்ஸ் ரூ.10000

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios