மெர்சிடஸ், பிஎம்டபிள்யூ, ஆடி காரும் கிடையாது; விராட் கோலி வாங்கிய முதல் கார் எது தெரியுமா?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது சொந்த பணத்தைக் கொண்டு முதலில் ஐகானிக் டாடா சஃபாரி காரை வாங்கியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. சச்சினுக்கு அடுத்து ரசிகர் பட்டாளங்களை கொண்டுள்ளார். உலகின் அதிக வருமானம் ஈட்டும் கிரிக்கெட் பிரபலங்களில் ஒருவராகவும் இருக்கிறார். விராட் கோலியின் நிகர சொத்து மதிப்பு ரூ.1050 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கார், பைக், வீடு, ஐபிஎல் வருமானம், பிசிசிஐ ஒப்பந்தம் ஆகியவற்றையும் தாண்டி விராட் கோலி இன்ஸ்டாகிராம் போஸ்ட் மற்றும் டுவிட்டர் மூலமாகவும் அதிக வருமானம் ஈட்டுகிறார்.
எப்போதும் நம்மை நெருக்கமாக வைப்பதிருப்பது ஃப்ரண்ட்ஷிப் அண்ட் உணவு – சச்சின் டெண்டுல்கர்!
ஒரே ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்காக விராட் கோலி ரூ.8.9 கோடி வருமானம் ஈட்டுகிறார். அதுமட்டுமின்றி ஒரே ஒரு டுவிட்டர் பதிவிற்கு ரூ.2.5 கோடி வருமானம் ஈடுகிறார். இது தவிர மும்பையில் ரூ.34 கோடி மதிப்பில் ஒரு வீடும், ஹரியானாவில் குருகிராமில் ரூ.80 கோடி மதிப்பில் ஒரு வீடும் வைத்திருக்கிறார். மேலும், ரூ.31 கோடிக்கும் அதிகளவில் விலை உயர்ந்த ஏராளமான கார்களை வாங்கி வைத்திருக்கிறார்.
இந்திய வீரர்களை சந்தித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கேரி சோபர்ஸ்!
விராட் கோலி ஆடி ஆர்8வி10 பிளஸ், ஆடி ஆர்8 எல்.எம்.எஸ் எக்ஸ், ஆடி ஏ8 எல், ஆடி க்யூ8, ஆடி க்யூ7, ஆடி ஆர்எஸ்5, ஆடி எஸ்5, ரெனால்ட் டஸ்டர், டொயோட்டா பார்ஜூனர், ரேஞ்ச் ரோவர் வாக், ஃப்ளையிங் ஸ்புர் அண்ட் பெண்ட்லி காண்டினெண்டல் ஜிடி என்று ஏராளமான கார் வகைகளை கேரேஜில் நிறுத்தி வைத்திருக்கிறார்.
டிவியில் ஒளிபரப்பு இல்லை; இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் போட்டியை எப்படி பார்ப்பது?
இப்படி கார்களை வாங்கி குவிக்கும் விராட் கோலி முதன் முதலில் வாங்கி கார் என்ன என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டும் நிலையில், தனது சொந்த பணத்தை கொண்டு அவர் மெர்சிடஸ், ஆடி, பிஎம்டபிள்யூ அல்லது வேறு எந்த ஆடம்பரமான சொகுசு கார்களை வாங்கவில்லை. முதல் முதலாக அவர் காங்கியது ஐகானிக் டாடா சஃபாரி கார் தான். சமீபத்தில் முதலாக வாங்கிய கார் குறித்தும், சஃபாரி கார் குறித்தும் அவர் கூறியிருந்தார். இன்ஜின், டிரைவ் மற்றும் போதுமான இடவசதி ஆகியவற்றின் காரணமாக கோலி சஃபாரி காரை வாங்கியுள்ளார்.