இந்திய வீரர்களை சந்தித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கேரி சோபர்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் சர் கார்பீல்ட் சோபர்ஸ் மைதானத்திற்கு வந்து இந்திய வீர்களை சந்தித்து பேசியுள்ள புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 12 ஆம் தேதி டொமினிகாவில் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக இந்திய அணியினர் 2 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் விளையாட இருக்கின்றனர். இந்தப் போட்டி நாளை நடக்கிறது.
டிவியில் ஒளிபரப்பு இல்லை; இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் போட்டியை எப்படி பார்ப்பது?
தற்போது பார்பிடாஸில் முகாமிட்டுள்ள இந்திய வீரர்களை வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் கேரி சோபர்ஸ் சந்தித்து அவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடியுள்ளார். இதில் இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் சுப்மன் கில்லை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். ரவிச்சந்திரன் அஸ்வின், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரை அவர் சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரவீன் குமார்!
இவர், 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கேரி சோபர்ஸ் 8,032 ரன்களும், 235 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஆண்டுதோறும் ஐசிசி சார்பாக வழங்கப்பட்டு வரும் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருது கேரி சோபர்ஸ் பெயரில் வழங்கப்பட்டு வருகிறது.
பெனால்டி ஷூட் அவுட் முறையில் 5-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று 9ஆவது முறையாக சாம்பியனான டீம் இந்தியா!