பெனால்டி ஷூட் அவுட் முறையில் 5-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று 9ஆவது முறையாக சாம்பியனான டீம் இந்தியா!
குவைத் அணிக்கு எதிரான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி பெற்று 9ஆவது முறையாக சாம்பியனாகியுள்ளது.

பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் 16ஆவது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில், 8 அணிகள் இடம் பெற்று 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடின. இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி கண்டது.
வெஸ்ட் இண்டீஸ், ஓமனைத் தொடர்ந்து பரிதாபமாக வெளியேறிய ஜிம்பாப்வே!
இந்தப் போட்டியைத் தொடர்ந்து நடந்த 2ஆவது போட்டியில் இந்தியா, நேபாள் அணியை எதிர்கொண்டது. இதில், இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் குவைத் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் இரு அணிகளும் 1-1 என்று சமநிலை பெறவே, இரு அணிகளுமே அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
ஷாக்கிங் நியூஸ்; ஜிம்பாப்வே அணியை கதற வைத்த ஸ்காட்லாந்து: உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவது யார்?
இதையடுத்து நடந்த அரையிறுதிப் போட்டியில் இந்தியா, லெபனான் அணியை எதிர்கொண்டது. இதில், பெனால்டி ஷூட் அவுட் முறையில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் லெபனான் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில் தான் இந்தியா மற்றும் குவைத் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி இன்று நடந்தது.
போட்டி தொடங்கிய முதல் 16 நிமிடத்திலேயே குவைத் அணி தனது முதல் கோல் அடித்தது. குவைத் அணிக்காக ஷபைப் அல்-கல்தி முதல் கோல் அடித்தார். அடுத்த நிமிடத்தில் இந்திய கேப்டன் சுனில் சேத்தரி கோல் அடிக்க முயற்சித்து கோட்டைவிட்டார். இறுதியாக இந்தியா 39ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தது.
முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் சென்ற ருதுராஜ், சுப்மன் கில், யஷஸ்வி: டெஸ்ட் போட்டி எப்படி இருக்கும்?
முதல் ஒரு மணி நேரத்தில் இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் இருந்த நிலையில், அடுத்த 30 நிமிடத்திலும் இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் இருந்தன. இதனால் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. இதில், இந்திய கேப்டன் ஒரு கோல் அடிக்கவே இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அடுத்து சந்தேஷ் ஜிங்கன் கோல் அடிக்கவே, இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
13ஆவது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் தோனி அண்ட் சாக்ஷி தோனி!
இதையடுத்து குவைத் வீரர் ஒரு கோல் அடித்த நிலையில், மீண்டும் இந்திய வீரர் ஒரு கோல் அடித்தார். அதன் பிறகு குவைத் வீரர் கோல் அடித்தார். இதனால், இந்தியா மற்றும் குவைத் அணிகள் 3-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றன, அடுத்து குவைத் வீரர் அப்துல் அஜீஸ் மஹ்ரான் ஒரு கோல் அடிக்க 3-3 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலை பெற்றன.
4ஆவது இடம் யாருக்கு? முதல் தகுதிச் சுற்றில் லைகா கோவை கிங்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் பலப்பரீட்சை!
அடுத்து சுபாஷிஷ் போஸ் கோல் அடிக்க இந்தியா 4-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதன் பிறகு குவைத் வீரர் கோல் போட இரு அணிகளும் சமநிலை பெற்றன. அதன் பிறகு இந்திய வீரர் நௌரெம் மகேஷ் சிங் ஒரு கோல் அடிக்கவே இந்தியா 5-4 என்ற கணக்கில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி பெற்று 9ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.
விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் 2023 உலகக் கோப்பை தான் கடைசி உலகக் கோப்பையா?
இதற்கு முன்னதாக, கடந்த 1993, 1997, 1999, 2005, 2009, 2011, 2015, 2021 ஆகிய ஆண்டுகளில் வெற்றி கண்டுள்ளது. தற்போது 9ஆவது முறையாக இந்தியா சாம்பியனாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.