13ஆவது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் தோனி அண்ட் சாக்ஷி தோனி!
தோனி மற்றும் சாக்ஷி தோனி இன்று தங்களது 13ஆவது பிறந்தநாளை கொண்டாடுகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம்.எஸ்.தோனி கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி சாக்ஷியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அப்போது தோனிக்கு 28 வயசு. இவர்களுக்கு ஸிவா என்ற ஒரு மகள் இருக்கிறாள். இந்த நிலையில், தோனி மற்றும் சாக்ஷி தோனி ஆகியோர் இன்று தங்களது 13ஆவது திருமண நாளை கொண்டாடுகின்றனர்.
4ஆவது இடம் யாருக்கு? முதல் தகுதிச் சுற்றில் லைகா கோவை கிங்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் பலப்பரீட்சை!
இந்த நிலையில் பிரசவத்தின் போது தோனி இல்லாத நிகழ்வு குறித்து சாக்ஷி தோனி மனம் திறந்து பேசியிருக்கிறார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: எனக்கு கிரிக்கெட் பற்றி ஒன்றும் தெரியாது. காதலிக்கும் போது கூட அதைப் பற்றி எனக்கு தெரியாது. ஆனால், எனது அம்மா தோனியின் ரசிகையாக இருந்தார்.
விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் 2023 உலகக் கோப்பை தான் கடைசி உலகக் கோப்பையா?
ஸிவா பிறந்த போது கூட உறவினர்கள், நண்பர்கள் என்று அனைவரும் எங்களைப் பார்க்க மருத்துவமனைக்கு வந்து விட்டார்கள். ஆனால், தோனி மட்டும் வரவில்லை. அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால், அவருக்கு கிரிக்கெட் முக்கியம். எனக்கு தோனி முக்கியம். அவருடன் சண்டை போட்டு அவரை கோப்படுத்தவும், அவரை சமாதானப்படுத்தவும், மகிழ்ச்சியடையச் செய்யவும், சோகமாக்கவும் என்னால் மட்டுமே முடியும் என்று கூறியுள்ளார்.
துப்பாக்கி ஏந்திய செக்யூரிட்டி கார்டை பைக்கில் ஏற்றி வந்த தோனி: வைரலாகும் வீடியோ!