வரலாற்றில் முதல் முறை: ஐசிசி பேட்டிங் ரேங்கிங்கில் இலங்கை மகளிர் கிரிக்கெட் வீராங்கனை சமரி அத்தபத்து முதலிடம்!
மகளிருக்கான ஐசிசி பேட்டிங் ரேங்கிங் பட்டியலில் இலங்கை அணி வீராங்கனை சமரி அத்தபத்து முதலிடம் பிடித்து வரலாறு படைத்துள்ளார்.
கடந்த 1990 ஆம் ஆண்டு இலங்கையில் பிறந்தவர் கிரிக்கெட் வீராங்கனை சமரி அத்தப்பத்து. இதையடுத்து 2009 ஆம் ஆண்டு முதல் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். இந்தியாவிற்கு எதிரான டி20 போட்டியின் மூலமாக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானவர் கிரிக்கெட் வீராங்கனை சமரி அத்தப்பத்து. அதன் பிறகு 2010 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் மூலமாக ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் சென்ற ருதுராஜ், சுப்மன் கில், யஷஸ்வி: டெஸ்ட் போட்டி எப்படி இருக்கும்?
இதுவரையில் 95 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள அத்தப்பத்து, 3,199 ரன்களை எடுத்துள்ளார். இதில், அதிகபட்சமாக 178* ரன்கள் அடங்கும். மேலும், 8 சதமும், 15 அரைசதமும் அடித்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 28 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார். இதே போன்று 113 டி20 போட்டிகளில் விளையாடி 2,402 ரன்கள் எடுத்துள்ளார். இதில், ஒரு முறை சதமும், 6 அரைசதமும் அடங்கும். 34 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.
13ஆவது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் தோனி அண்ட் சாக்ஷி தோனி!
தற்போது நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 2 ஒரு நாள் போட்டிகளிலும் இரு அணிகளும் தலா 1-1 என்று கைப்பற்றி சமநிலையில் இருந்தன. இந்த நிலையில், நேற்று 3ஆவது போட்டி நடந்தது. இதில், இலங்கை அணி டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
4ஆவது இடம் யாருக்கு? முதல் தகுதிச் சுற்றில் லைகா கோவை கிங்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் பலப்பரீட்சை!
நியூசிலாந்துக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய அத்தப்பத்து 2 போட்டிகளில் சதம் அடித்துள்ளார். 3ஆவது போட்டியில் பிளேயர் ஆஃப் தி மேட்ச் வாங்கிய அத்தப்பத்து பிளேயர் ஆஃப் தி சீரிஸ் விருதையும் வென்றுள்ளார். இந்த வெற்றியின் மூலமாக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை மகளிர் அணி 2-1 என்று கைப்பற்றியது. இவ்வளவு ஏன், ஒரு நாள் கிரிக்கெட்டில் 3000 ரன்களை கடந்த முதல் இலங்கை மகளிர் வீராங்கனை என்ற சாதனையையும் இவர் படைத்துள்ளார்.
விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் 2023 உலகக் கோப்பை தான் கடைசி உலகக் கோப்பையா?
இந்த நிலையில், மகளிருக்கான பேட்டிங் ரேங்கிங் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. இதில் மகளிருக்கான பேட்டிங் ரேங்கிங் பட்டியலில் இலங்கை மகளிர் அணி வீராங்கனை சமரி அத்தப்பத்து முதலிடம் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். ஆம், இலங்கை மகளிர் அணியின் முதல் வீராங்கனையாக இப்படியொரு சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
துப்பாக்கி ஏந்திய செக்யூரிட்டி கார்டை பைக்கில் ஏற்றி வந்த தோனி: வைரலாகும் வீடியோ!