டிவியில் ஒளிபரப்பு இல்லை; இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் போட்டியை எப்படி பார்ப்பது?
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 12 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்த தொடர் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படவில்லை.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் புஜரா, உமேஷ் யாதவ் மற்றும் ஷமி கிடையாது. மாறாக, ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகேஷ் குமார், ஜெயதேவ் உனத்கட், நவ்தீப் சைனி ஆகியோர் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.
கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரவீன் குமார்!
இதே போன்று ஒரு நாள் கிரிக்கெட்டில் யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். வரும் 12 ஆம் தேதி தொடங்கும் தொடரானது ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இந்தியா, 2 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் விளையாடுகிறது. இந்தப் போட்டி நாளை தொடங்கும் என்று கூறப்படுகிறது.
பெனால்டி ஷூட் அவுட் முறையில் 5-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று 9ஆவது முறையாக சாம்பியனான டீம் இந்தியா!
ஏனென்றால், கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி பின்னர் நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி கலந்து கொண்டு தோல்வியோடு திரும்பியது. இதன் காரணமாக, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, பயிற்சி போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், உள்ளூர் வீரர்களும் இடம் பெற்று விளையாடுகின்றனர்.
உலகக் கோப்பைக்கான கடைசி இடம் யாருக்கு? இந்தியாவுடன் மோதும் அணி நெதர்லாந்தா? ஸ்காட்லாந்தா?
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் போட்டிகள்:
ஜூலை 12 – இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் – டெஸ்ட் 1 – டொமினிகா – இரவு 7.30 மணி
ஜூலை 20 - இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் – டெஸ்ட் 2 – டிரினிடாட் - இரவு 7.30 மணி
ஜூலை 27 - இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் – முதல் ஒரு நாள் போட்டி – பார்படாஸ் – இரவு 7.00 மணி
ஜூலை 29 - இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் – 2ஆவது ஒரு நாள் போட்டி – பார்படாஸ் - இரவு 7.00 மணி
ஆகஸ்ட் 01 - இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் – 3ஆவது ஒரு நாள் போட்டி – டிரினிடாட் - இரவு 7.00 மணி
ஆகஸ்ட் 03 - இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் – முதல் டி20 போட்டி – டிரினிடாட் - இரவு 8.00 மணி
ஆகஸ்ட் 06 - இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் – 2ஆவது டி20 போட்டி – கயானா - இரவு 8.00 மணி
ஆகஸ்ட் 08 - இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் – 3ஆவது டி20 போட்டி – கயானா - இரவு 8.00 மணி
ஆகஸ்ட் 12 - இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் – 4ஆவது டி20 போட்டி – ஃபுளோரிடா - இரவு 8.00 மணி
ஆகஸ்ட் 13 - இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் – 5ஆவது டி20 போட்டி – ஃபுளோரிடா - இரவு 8.00 மணி
முதல் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதே போன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. டி20 போட்டிகள் கொண்ட தொடர் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. ஆனால், இந்தப் போட்டிகள் எதுவும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படவில்லை. மாறாக ஜியோ சினிமா மற்றும் ஃபேன்கோடு ஆப்களில் பிளாட்பார்மில் தான் பார்க்க முடியும்.
இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவரான அஜித் அகர்கருக்கு எத்தனை கோடி சம்பளம் தெரியுமா?