உலகக் கோப்பைக்கான கடைசி இடம் யாருக்கு? இந்தியாவுடன் மோதும் அணி நெதர்லாந்தா? ஸ்காட்லாந்தா?

உலகக் கோப்பைக்கான 10ஆவது அணியாக இடம் பெறும் வாய்ப்பு நெதர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு கிடைத்துள்ளது.

Netharlands or Scotland, which team will qualify to WC 2023

உலகக் கோப்பை தகுதி சுற்றுப் போட்டி தற்போது ஜிம்பாப்வே நாட்டில் நடந்து வருகிறது. வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. ஏற்கனவே இந்தியா உள்பட பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் நேரடியாக தகுதி பெற்றன.

இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவரான அஜித் அகர்கருக்கு எத்தனை கோடி சம்பளம் தெரியுமா?

இதையடுத்து எஞ்சிய 2 இடங்களுக்கான உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டி ஜிம்பாப்வே நாட்டில் நடந்து வருகிறது. இதில், ஏற்கனவே சூப்பர் சிக்ஸ் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த இலங்கை அணி 9ஆவது அணியாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.

ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஓமன் ஆகிய அணிகள் உலகக் கோப்பை வாய்ப்பை இழந்து பரிதாபமாக தொடரிலிருந்து வெளியேறின. இதையடுத்து, ஜிம்பாப்வே, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுக்கு உலகக் கோப்பைக்கான வாய்ப்பு இருந்தது. இந்த நிலையில் தான் ஜிம்பாப்வே மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை சூப்பர் சிக்ஸ் 6ஆவது போட்டி நடந்தது. இதில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்து வீசியது. அதன்படி முதலில் ஆடிய ஸ்காட்லாந்து அணியில், ஒவ்வொரு வீரர்களும் 20 ரன்களுக்கு மேல் எடுத்தனர். கடைசியாக வந்த மைக்கேல் லீஸ்க் 48 ரன்கள் எடுக்க, ஜிம்பாப்வே அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்தது.

பெனால்டி ஷூட் அவுட் முறையில் 5-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று 9ஆவது முறையாக சாம்பியனான டீம் இந்தியா!

இதில், ஜிம்பாப்வே அணியைப் பொறுத்த வரையில் பந்து வீச்சில் சீயன் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். தென்டை சதாரா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதையடுத்து 235 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட ஜிம்பாப்வே அணி விளையாடியது. தொடக்க வீரர்கள் 0, 2, 12, 12 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பிறகு வந்த ஷிகந்தர் ராஸா 34 ரன்களில் வெளியேறினார். ரியால் பர்ல் நிதானமாக விளையாடி 83 ரன்கள் எடுத்தார். கடைசியாக வெஸ்லி மாதேவேரே 40 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

ஷாக்கிங் நியூஸ்; ஜிம்பாப்வே அணியை கதற வைத்த ஸ்காட்லாந்து: உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவது யார்?

இறுதியாக, ஜிம்பாப்வே அணி 41.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 203 ரன்கள் மட்டுமே எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தது. அதுமட்டுமின்றி இந்த உலகக் கோப்பையில் இடம் பெறுவதற்கான வாய்ப்பையும் இழந்து சோகத்துடன் இந்த தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

இதுவரையில் விளையாடிய 5 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்றியும் 2ல் தோல்வியும் அடைந்து 3ஆவது அணியாக உலகக் கோப்பைக்கான வாய்ப்பை இழந்து ஜிம்பாப்வே அணி வெளியேறியுள்ளது. இதையடுத்து உலகக் கோப்பைக்கான வாய்ப்பு ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு சென்றுள்ளது.

வெஸ்லி வரலாற்றில் முதல் முறை: ஐசிசி பேட்டிங் ரேங்கிங்கில் இலங்கை மகளிர் கிரிக்கெட் வீராங்கனை சமரி அத்தபத்து முதலிடம்!

ஸ்காட்லாந்து 4 போட்டிகளில் விளையாடி 3ல் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. இதே போன்று நெதர்லாந்து அணி 4 போட்டிகளில் 2ல் வெற்றியும் 2ல் தோல்வியும் அடைந்துள்ளது. வரும் 6ஆம் தேதி ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி போட்டி நடக்கிறது. இந்தப் போட்டியின் முடிவில் உலகக் கோப்பையில் இடம் பெறும் அந்த அணி எது என்று தெரிந்து விடும். நெதர்லாந்து வெற்றி பெற்றால், வரும் நம்பவர் 11ம் தேதி பெங்களூருவில் நடக்கும் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும். அப்படியில்லை என்றால் ஸ்காட்லாந்து, இந்தியாவுடன் பலப்பரீட்சை நடத்தும்.

13ஆவது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் தோனி அண்ட் சாக்‌ஷி தோனி!

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios