இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவரான அஜித் அகர்கருக்கு எத்தனை கோடி சம்பளம் தெரியுமா?
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவரான இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கருக்கு சம்பளமாக ரூ.3 கோடி உயர்த்தி வழங்கப்படுகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்து வளர்ந்த அஜித் அகர்கர் கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடியுள்ளார். இந்திய அணிக்காக 191 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 1269 ரன்களும், 288 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார். இதே போன்று 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 571 ரன்களும், 58 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.
4 ரன்களில் வாய்ப்பை இழந்த திருப்பூர் தமிழன்ஸ்; 4ஆவது டீமாக உள்ளே வந்த மதுரை!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ஐபிஎல் தொடர்களில் விளையாடி வந்தார். அதிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் துணை பயிற்சியாளராக செயல்பட்டார். இதற்கிடையில், இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவருக்கான பதவிக்கு 2 முறை விண்ணப்பித்திருந்தார்.
பெனால்டி ஷூட் அவுட் முறையில் 5-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று 9ஆவது முறையாக சாம்பியனான டீம் இந்தியா!
ஆனால், தேர்வுக்குழு தலைவராக சேத்தன் சர்மா நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் சேத்தன் சர்மாவின் ஸ்டிங் ஆபரேஷன் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து தேர்வுக்குழு தலைவர் பதவி கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் காலியாக இருந்தது. கிட்டத்தட்ட 3 மாதங்கள் தேர்வுக்குழு தலைவர் பதவி காலியாக இருந்த நிலையில், கடந்த ஜூன் 7 ஆம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து வெளியேறியது.
ஷாக்கிங் நியூஸ்; ஜிம்பாப்வே அணியை கதற வைத்த ஸ்காட்லாந்து: உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவது யார்?
இதையடுத்து, கடந்த ஜூன் 23 ஆம் தேதி தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ அறிவித்தது. மேலும், இதுவரையில், ரூ.1 கோடி வரையில் தான் தலைவர் பதவிக்கு ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக முன்னாள் வீரர்கள் யாரும் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. எனினும், முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார்.
இதற்கு முன்னதாக மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் தேர்வுக்குழு அதிகாரியாக அஜித் அகர்கர் பொறுப்புகளை வகித்து வந்தார். அதன் பிறகு தான் டெல்லி கேபிடல்ஸ் அணியின் 2ஆம் கட்ட பயிற்சியாளராக இருந்தார். ஆனால், கடந்த வாரம் டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து அணி நிர்வாகம் அவரை நீக்கி அறிவிப்பு வெளியிட்டது.
இந்த நிலையில், அஜித் அகர்கர், இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி, தேர்வுக்குழுவில் இருக்கும் சிவ சுந்தர் தாஸ், சலீல் அங்கோலா, ஸ்ரீதரன் சரத் மற்றும் சுப்ரதோ பானர்ஜி ஆகியோருடன் தேர்வுக்குழுவில் ஒருவராகவும் செயல்படுவார். அதோடு, இந்த தேர்வுக்குழுவிற்கு தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு இதுவரையில் ரூ.1 கோடி வரையில் சம்பளம் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அது ரூ.3 கோடியாக உயர்த்தி வழங்கப்படுகிறது.
13ஆவது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் தோனி அண்ட் சாக்ஷி தோனி!