4 ரன்களில் வாய்ப்பை இழந்த திருப்பூர் தமிழன்ஸ்; 4ஆவது டீமாக உள்ளே வந்த மதுரை!
டிஎன்பிஎல் தொடரின் 27ஆவது லீக் போட்டியில் சீகம் மதுரை பாந்தர்ஸ் அணி 4 ரன்களில் வெற்றி கண்டு 4ஆவது அணியாக தகுதி பெற்றுள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. லைகா கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய அணிகள் குவாலிஃபையருக்கு தகுதி பெற்றன. இதையடுத்து 4ஆவது அணிக்கான ரேஸில் சீகம் மதுரை பாந்தர்ஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றன.
பெனால்டி ஷூட் அவுட் முறையில் 5-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று 9ஆவது முறையாக சாம்பியனான டீம் இந்தியா!
இதையடுத்து இன்று நடந்த 27ஆவது போட்டியில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் சீகம் மதுரை பாந்தர்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சீகம் மதுரை பாந்தர்ஸ் அணியில் தொடக்க வீரர்களான லோகேஷ்வர் மற்றும் ஹரி நிஷாந்த் இருவரும் அதிரடியாக ஆடினர். இதில், லோகேஷ்வர் 44 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹரி நிஷாந்த் 34 ரன்களில் வெளியேறினார்.
ஷாக்கிங் நியூஸ்; ஜிம்பாப்வே அணியை கதற வைத்த ஸ்காட்லாந்து: உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவது யார்?
ஆதித்யா 37 ரன்களில் ஆட்டமிழக்க, ஸ்வப்னில் சிங் 17 ரன்களில் வெளியேறினார். இறுதியாக சீகம் மதுரை பாந்தர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் குவித்தது. இதையடுத்து 161 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி பேட்டிங் ஆடியது.
இதில், விஷால் வைத்யா 21 ரன்களிலும், துஷார் ரஹேஜா 51 ரன்களிலும் ஆட்டமிழக்க, விஜய் சங்கர் 28 ரன்கள் மட்டுமே எடுத்தார். இறுதியாக புவனேஷ்வர் 18 ரன்களில் வெளியேறவே ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்து 4 ரன்களில் தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி டிஎன்பிஎல் தொடரிலிருந்து வெளியேறியது. அதோடு, சீகம் மதுரை பாந்தர்ஸ் அணி 4ஆவது அணியாக அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியும் தொடரிலிருந்து வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.