எப்போதும் நம்மை நெருக்கமாக வைப்பதிருப்பது ஃப்ரண்ட்ஷிப் அண்ட் உணவு – சச்சின் டெண்டுல்கர்!
யுவராஜ் சிங் மற்றும் அஜித் அகர்கர் ஆகியோருடன் மதிய உணவு அருந்திய சச்சின் டெண்டுல்கர், எப்போதும் நம்மை நெருக்கமாக வைத்திருப்பது நட்பு மற்றும் உணவு என்று இன்ஸ்டா பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தற்போது தனது குடும்பத்தோடு லண்டன் சென்றுள்ளார். அங்கு இந்திய அணியின் முன்னாள் வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் அஜித் அகர்கர் ஆகியோரை சந்தித்து அவர்களுடன் மதிய உணவு சாப்பிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, நம்மை நெருக்கமாக வைத்திருக்கும் 2 விஷயங்களில் ஒன்று ஃப்ரண்ட்ஷிப் மற்றொன்று உணவு என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
இந்திய வீரர்களை சந்தித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கேரி சோபர்ஸ்!
இதற்கு பதிலளித்த பிரையர் லாரா கூறியிருப்பதாவது: கிரிக்கெட் விளையாட்டில் சிறந்த பேட்ஸ்மேனாக திகழும் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பிரையன் லாரா, இது எனக்கு வெறும் ஹாய் மற்றும் ஃபைதான். நீங்கள் அதிர்ஷ்டசாலி என்று குறிபிட்டுள்ளார். கென்யா சென்றிருந்த சச்சின் டெண்டுல்கர், அங்கு மசாய் மாரா பகுதிகளுக்கு சென்ற புகைபபடங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டிவியில் ஒளிபரப்பு இல்லை; இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் போட்டியை எப்படி பார்ப்பது?
அஜித் அகர்கர் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது ஆண்டு வருமானம் ரூ.3 கோடி ஆகும். அதுமட்டுமின்றி, தேர்வுக்குழுவில் இருக்கும் சிவ சுந்தர் தாஸ், சலீல் அங்கோலா, ஸ்ரீதரன் சரத் மற்றும் சுப்ரதோ பானர்ஜி ஆகியோருடன் தேர்வுக்குழுவில் ஒருவராகவும் செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.