சீனியர்ஸுக்கு ஓய்வு; இளம் வீரர்களுக்கு வாய்ப்பு: எங்கயோ போகும் டீம் இந்தியா; டி20 அணி அறிவிப்பு!

5 டி20 போட்டிகள் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Team india 5 match T20 squad announced against West Indies

இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 12 ஆம் தேதி டொமினிகாவில் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக இந்திய அணியினர் 2 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் விளையாட இருக்கின்றனர்.

ரிவர்ஸ் ஸ்வீப் பயிற்சி செய்த விராட் கோலி; வைரலாகும் வீடியோ!

ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக அஜித் அகர்கர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ரோகித் சர்மா, விராட் கோலி, முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

2023 ICC ODI உலகக் கோப்பைக்கான MA சிதம்பரம் ஸ்டேடியம் டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

இதையடுத்து இளம் வீரர்களுக்கு இந்த டி20 தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, முகேஷ் குமார் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மெர்சிடஸ், பிஎம்டபிள்யூ, ஆடி காரும் கிடையாது; விராட் கோலி வாங்கிய முதல் கார் எது தெரியுமா?

இந்தியா டி20 டீம்:

இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாஅண்டியா (கேப்டன்), அக்‌ஷர் படேல், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், ஆவேஷ் கான், முகேஷ் குமார்

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் போட்டிகள்:

ஜூலை 12 – இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் – டெஸ்ட் 1 – டொமினிகா – இரவு 7.30 மணி

ஜூலை 20 - இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் – டெஸ்ட் 2 – டிரினிடாட் - இரவு 7.30 மணி

ஜூலை 27 - இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் – முதல் ஒரு நாள் போட்டி – பார்படாஸ் – இரவு 7.00 மணி

ஜூலை 29 - இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் – 2ஆவது ஒரு நாள் போட்டி – பார்படாஸ் - இரவு 7.00 மணி

ஆகஸ்ட் 01 - இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் – 3ஆவது ஒரு நாள் போட்டி – டிரினிடாட் - இரவு 7.00 மணி

ஆகஸ்ட் 03 - இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் – முதல் டி20 போட்டி – டிரினிடாட் - இரவு 8.00 மணி

ஆகஸ்ட் 06 - இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் – 2ஆவது டி20 போட்டி – கயானா - இரவு 8.00 மணி

ஆகஸ்ட் 08 - இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் – 3ஆவது டி20 போட்டி – கயானா - இரவு 8.00 மணி

ஆகஸ்ட் 12 - இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் – 4ஆவது டி20 போட்டி – ஃபுளோரிடா - இரவு 8.00 மணி

ஆகஸ்ட் 13 - இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் – 5ஆவது டி20 போட்டி – ஃபுளோரிடா - இரவு 8.00 மணி

முதல் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதே போன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. டி20 போட்டிகள் கொண்ட தொடர் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. ஆனால், இந்தப் போட்டிகள் எதுவும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படவில்லை. மாறாக ஜியோ சினிமா மற்றும் ஃபேன்கோடு ஆப்களில் பிளாட்பார்மில் தான் பார்க்க முடியும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios