ரிவர்ஸ் ஸ்வீப் பயிற்சி செய்த விராட் கோலி; வைரலாகும் வீடியோ!
ரவிச்சந்திரன் அஸ்வின் பந்து வீசும் போது அதனை ரிவர்ஸ் ஸ்வீப் அடித்த விராட் கோலியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 12 ஆம் தேதி டொமினிகாவில் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக இந்திய அணியினர் 2 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் விளையாட இருக்கின்றனர்.
2023 ICC ODI உலகக் கோப்பைக்கான MA சிதம்பரம் ஸ்டேடியம் டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?
அதற்கு முன்னதாக இந்திய அணியினர் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதில், முதலில் ஜெயதேவ் உனத்கட் பந்து வீசினார். அடுத்து ரவிச்சந்திரன் அஸ்வின் பந்து வீசினார். அவரது பந்தில், விராட் கோலி ரிவர்ஸ் ஸ்வீப் அடித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் போட்டிகள்:
ஜூலை 12 – இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் – டெஸ்ட் 1 – டொமினிகா – இரவு 7.30 மணி
ஜூலை 20 - இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் – டெஸ்ட் 2 – டிரினிடாட் - இரவு 7.30 மணி
ஜூலை 27 - இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் – முதல் ஒரு நாள் போட்டி – பார்படாஸ் – இரவு 7.00 மணி
ஜூலை 29 - இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் – 2ஆவது ஒரு நாள் போட்டி – பார்படாஸ் - இரவு 7.00 மணி
ஆகஸ்ட் 01 - இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் – 3ஆவது ஒரு நாள் போட்டி – டிரினிடாட் - இரவு 7.00 மணி
ஆகஸ்ட் 03 - இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் – முதல் டி20 போட்டி – டிரினிடாட் - இரவு 8.00 மணி
ஆகஸ்ட் 06 - இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் – 2ஆவது டி20 போட்டி – கயானா - இரவு 8.00 மணி
ஆகஸ்ட் 08 - இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் – 3ஆவது டி20 போட்டி – கயானா - இரவு 8.00 மணி
ஆகஸ்ட் 12 - இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் – 4ஆவது டி20 போட்டி – ஃபுளோரிடா - இரவு 8.00 மணி
ஆகஸ்ட் 13 - இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் – 5ஆவது டி20 போட்டி – ஃபுளோரிடா - இரவு 8.00 மணி
முதல் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதே போன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. டி20 போட்டிகள் கொண்ட தொடர் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
ஆனால், இந்தப் போட்டிகள் எதுவும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படவில்லை. மாறாக ஜியோ சினிமா மற்றும் ஃபேன்கோடு ஆப்களில் பிளாட்பார்மில் தான் பார்க்க முடியும்.
மெர்சிடஸ், பிஎம்டபிள்யூ, ஆடி காரும் கிடையாது; விராட் கோலி வாங்கிய முதல் கார் எது தெரியுமா?